தமிழர் இதயத்திலெல்லாம் இடியை இறக்கி விட்டான்(ர்?). நெஞ்சைப் பிளந்து நெருப்பை திணித்து விட்டான்(ர்?). பதவிப் பிச்சைக்காக தமிழர் நலனை அடகு வைத்து விட்டான்(ர்?)
தமிழகத்தில் வைகோ, பழ,நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் சிறுகச் சிறுக குருவிபோல திரட்டி கட்டிக் காத்து வந்திட்ட தமிழின உணர்வையும் தமிழீழ ஆதரவையும் நயவஞ்சகமாகக் கவர்ந்து காங்கிரசின் காலடியில் தன் பதவியைக் காத்துக் கொள்வதற்காக காவு கொடுத்துவிட்டான்(ர்?).
வைகோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்ததற்கு துரோகப் பட்டம் கட்டி கலைஞனுக்கு காவடி எடுத்தன வலையுலகக் கழகக் குஞ்சுகள்.
இப்போது எங்கே போய் வைத்துக் கொள்ளப் போகிறீர்கள் உங்கள் முகங்களை?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துக் கொண்ட தீர்மானங்களுக்கு மாறாக, தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என அறிவித்துள்ளான்(ர்?) இந்த கட்டையில் போகிற கருணாநிதி.
இவன்(ர்?) கட்டையில் போகிற காலத்தில் த்மிழர் நலனையும் சேர்த்து புதைத்து விட எண்ணியுள்ளாரோ என்னவோ?
இலங்கையின் ஊதுகோலாக வந்த பிரணாப் முகர்ஜி கொடுத்த வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு தமிழர் நலனை காவு கொடுத்துள்ளான்(ர்?) இந்த தமிழினத் தலைவர் வேடம் போட்டு டெல்லியிடம் காட்டிக் கொடுத்த துரோகி...
தமிழர் இதயத்திலெல்லாம் இடியை இறக்கி விட்டான்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை....
படிக்கவும்.
ஐ.பி.என். செய்தி: DMK MPs won't quit over Lankan issue: TN CM
காட்டிக் கொடுப்பவன் எங்கே?
அந்தக் கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி!
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!
பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.
Showing posts with label தமிழீழம். Show all posts

Sunday, October 26, 2008
Sunday, October 19, 2008
தமிழின விரோதிகளே மனதை மாற்றிக் கொள்வீர்
தமிழின விரோதிகள் இன்னும் ஏதாவது காரணங்களைத் தேடிப் பிடித்து தாங்கள் ஏன் தமிழீழத்தை ஆதரிக்கக் கூடாது எனவும் , தமிழகத் தமிழர்கள் இந்திய அரசுக்கு விரோதமாக நடப்பதாயும் தங்கள் ஊடகங்களின் வாயிலாக பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். அவர்களை தமிழர்களாகக் கருதாமல் மனிதர்களாகக் கருதி உங்கள் ஈழ எதிர்ப்பினைக் கைவிடுங்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் துன்பப்படும் மக்களாய் கருதி தமிழீழத்தை ஆதரித்திடுங்கள்.
நாள் தோறும் சிங்கள இனவெறி பிடித்த ராணுவத்தின் பிடியில் அவர்கள் படும் துயரத்தில் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
தமிழீழ விடுதலைப் போரை ஆதரிப்போம்.

Wednesday, October 15, 2008
எம்.பி பதவி ராஜினாமா, சர்வபரித் தியாகத்துக்கும், ஆயத்தமாக உள்ளோம்: வைகோ
மதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய தயார்.
'தமிழர் நலன் காக்கவும், ஈழத் தமிழர் இனப்படுகொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள ம.தி.மு.க.வுக்கு அதன் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல'' என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று ஒழிக்க திட்டமிட்டு, சிங்கள இனவாத அரசு தொடர்ந்து இனப்படுகொலை நடத்துவதைத் தெரிந்து கொண்டே இந்திய அரசு ஆயுத உதவி செய்து வந்துள்ளது. எனவே இது அண்டை நாட்டுக்கு நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்ட உதவி அல்ல, சிங்கள அரசுக்கு இராணுவ பலத்தைக் கூட்டுவதற்காகவே வழங்கப்பட்ட உதவி ஆகும்.
இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங், அக்டோபர் 2ஆம் தேதியன்று எனக்கு எழுதியுள்ள கடிதம் ஒரு ஒப்புதல் வாக்குமூலமாகவே உள்ளது. இலங்கை விமானப்படைக்கு வழங்கி உள்ள ரேடார்களை, இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இலங்கைக்கு அனுப்பி உள்ள இந்திய இராணுவப் பிரிவினரைத் திரும்ப அழைக்க வேண்டும்.
குறைந்த வட்டியில் மானிய உதவி போல இலங்கைக்கு வழங்குவதாகச் சொன்ன கடனை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இந்தியக் கடற்படையும், இலங்கைக் கடற்படையும் செய்து கொண்ட தகவல் பரிமாற்று ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இலங்கை இராணுவத்துக்கும், விமானப்படையினருக்கும் இந்தியாவில் அளிக்கின்ற பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இலங்கை சிங்கள அரசு தன்னிச்சையாகவே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. ஒவ்வொரு நாளும், தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதல் நடத்தி, பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதால், உடனடியாகத் தாக்குதலை இலங்கை அரசு நிறுத்திவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்.
அப்படி அறிவிக்குமாறும் சிங்கள அரசின் நடவடிக்கைகளால் முறிந்து போன அமைதிப் பேச்சுக்களை ஏற்கனவே நடுநிலைமையோடு கடமை ஆற்றிய நார்வே அரசை நடுவராகக் கொண்டு நடத்த வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தின் அலுவலகத்தைக் கொழும்பில் திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் வற்புறுத்துவதோடு, இதைச் செய்வதற்கு சிங்கள அரசு முன்வராவிட்டால், இலங்கையுடனான ராஜிய உறவுகளை இந்தியா துண்டித்துக் கொள்ளும் என்றும், பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்வதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வராவிடில், அந்த அரசுக்குத்தரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவிக்க வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களவருக்கு ஆயுதங்களை வழங்கி துரோகம் செய்த இந்திய அரசின் குற்றத்துக்கு மத்திய அமைச்சரவைதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே, இலங்கையில் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்வதற்கு உரிய நிர்பந்தத்தை மத்திய அரசு உடனடியாகச் செய்யாவிடில், அமைச்சரவையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.
தமிழர் நலன் காக்கவும், ஈழத்தமிழர் இனக் கொலையைத் தடுக்கவும், சர்வபரித் தியாகத்துக்கும் ஆயத்தமாக உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்துக்கு அதன் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் துறப்பது ஒரு பொருட்டோ அல்ல'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
நன்றி: வெப் துனியா
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0810/15/1081015025_1.htm

Tuesday, October 14, 2008
என்ன பொருத்தம்: தமிழீழம் Vs கொசோவா
“ சுதந்திரம் மனிதனின் பிறப்புரிமை” இது ஒவ்வொரு இந்தியனையும் தட்டியெழுப்பிய திலகரின் அறிவிப்பு.
இலங்கைத் தமிழர் படும் இன்னல்களுக்குத் தீர்வுகாணும் போது, உலகின் பிற பாகங்களில் நடைபெற்று வந்த அதே போன்ற நிகழ்வுகளுக்கு எவ்வாறு ஒரு நிரந்தரமான தீர்வு காணப் பட்டது என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் இன்றைய வெப் துனியா இணைய இதழில் வெளியான கட்டுரையில் இருந்து ஒரு பகுதி நம் அனைவரின் பார்வைக்கு.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பான விடயத்தில் கொசோவோவை பார்க்க வேண்டியதன் அவசியமென்ன? அவசியம் ஏதெனில், அந்நாட்டின் பிறப்பிற்கும் இலங்கையில் நடந்துவருவது போன்ற இன ஒடுக்கலே காரணமாகும்.
ஐரோப்பாவில் முன்பு யுகோஸ்லாவியாவின் ஒரு அங்கமாகவும், பிறகு செர்பிய குடியரசின் அங்கமாகவும் இருந்தது கொசோவோ பகுதி. அங்கு வாழ்ந்த அல்பானியர்கள் அந்நாட்டின் பெரும்பான்மை (செர்பிய) இனத்தவர்களின் ஆதரவு பெற்ற செர்பிய அரசால் தொடர்ந்த இன ஒடுக்கலுக்கு ஆளாகிவந்த நிலையில், அதற்கு எதிராக நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திவந்த கொசோவோ, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுதந்திரப் பிரகடனம் செய்தது.
அதன் சுதந்திரப் பிரகடனத்தை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பல நாடுகளும் அங்கீகரித்துவிட்டன.
கொசோவோ மக்களின் விடுதலை உணர்விற்கு வித்திட்டது மிலோவிச் தலைமையிலான கம்யூனிச- செர்பிய பேரினவாத அரசு. அதற்கு எதிராக முதலில் சாத்வீக வழியிலும், பிறகு ஆயுதமெடுத்தும் போராடிய அம்மக்களுக்கு அமெரிக்காவும், அதன் நோட்டோ கூட்டாளி நாடுகளும் ஆதரவாக நின்றன. அதன் காரணமாக கொசோவோ மக்களின் பிரச்சனை ஐ.நா. பாதுகாப்புப் பேரவைக்கு கொண்டு செல்லப்பட்டு, இன ஒடுக்கலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு கொசோவோ நாட்டிற்குள் சென்ற ஐரோப்பிய அமைதிப் படைகள், அல்பானியர்களை அழித்துக்கொண்டிருந்த மிலாசோவிச்சின் செர்பிய படைகளை வெளியேற்றின. அங்கு கொசோவோ மக்கள் தேர்ந்தெடுத்த நாடாளுமன்றமும், அரசும் நிறுவப்பட்டது.
10 ஆண்டுக்கால சுயாட்சிக்குப் பிறகு, தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர நாடாக, தங்களுடைய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, பிரகடனம் செய்தது கொசொவோ அரசு.
இலங்கையில் பெரும்பான்மை இனமான சிங்களவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும், தொன்றுதொட்டு அம்மண்ணில் வாழ்ந்துவரும் சிறுபான்மை இனமான தமிழர்களை கால் நூற்றாண்டிற்கும் மேலாக கொன்று குவித்துவருகிறது. அவர்களின் பாரம்பரிய பூமியில் இருந்து அவர்களை பலாத்காரமாக வெளியேற்றி சிங்களர்களை குடியமர்த்தி, அப்பகுதிகளின் பெயர்களையும் சிங்களப் பெயர்களாக மாற்றி வருகிறது.
சிறிலங்க அரசு நிர்வாகத்தில் தமிழர்களுக்கு இடமில்லை. அவர்களின் பாரம்பரிய பூமியில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
கொசோவோவில் எது நடந்ததோ அதுவே மிக உக்கிரமாக இலங்கையிலும் நடைபெற்று வருகிறது. அந்த மக்களுக்குத் தெளிவான தீர்வைத் தந்த உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கும் அதே தீர்வை வழங்கிட வேண்டும்.
ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து, அவர்களுக்குரிய வாழ்வுரிமையை உறுதிசெய்து அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆதரவளித்திட வேண்டும்.
அதற்கு முதற்படியாக சிறிலங்க அரசின் இனப் படுகொலையை நிறுத்தவும், தமிழர்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
இலங்கையில் அமைதி ஏற்பட அனுசரணையாளராக பணியாற்றிய நார்வே நாடு, தனது ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் இணைந்து அம்முயற்சியை முன்னெடுக்க வேண்டும். அதனை இந்தியா ஆதரிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை, அந்நாட்டு அரசினாலும், அதன் உந்துதலின் பேரில் அந்நாட்டு இராணுவமும், காவல்துறையும் மேற்கொண்டுவரும் இன அழித்தல் நடவடிக்கையினாலும் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அம்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளின் தலையாய கடமையாகும்.
இந்த ஒரு வழியைத் தவிர, இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கூடிய வேறு வழி ஏதுமில்லை.
நன்றி: http://tamil.webdunia.com/

Subscribe to:
Posts (Atom)