ஊழல் செய்து மாட்டிக்கொண்ட தி.மு.க. தான் தப்பித்துக் கொள்வதற்காக
மத்திய காங்கிரஸ் அரசுக்கு மீத்தேன், கெயில், கூடங்குளம், நியூட்ரினோ, காவிரி, முல்லைப்பெரியாறு போன்றவற்றில் தமிழகத்தைக் காட்டிக் கொடுத்தது மட்டுமல்லாது உச்சகட்டமாக ஈழத்தில் ஒரு இலட்சத்தி ஐம்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குத் துணைபோய் துரோகமிழைத்தது.

அதே போன்றதொரு இழி நிலையில் தற்போதைய அ.தி.மு.க. சிக்கிக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. மாநில உரிமைகளை நசுக்கும் பா.ஜ.க.விடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ள அ.தி.மு.க. இனியும் மத்திய அரசிடம் போராடி தமிழக நலன்களைக் காக்கும் என்று நம்புவதற்கில்லை..
இத்தகைய சூழலில் ஊழல் செய்து வகையாக மாட்டிக் கொண்டு மக்கள் நலனைக் காவு கொடுக்கும் தி.மு.க. , அ.தி,மு.க. ஆகிய கட்சிகளிடமிருந்து தமிழகத்தைக் காக்கும் பொறுப்பு ஊழலை எதிர்க்கும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் உள்ளது.
அத்தகைய ஜனநாயக சக்திகள் கொண்ட கொள்கைகளில் இருந்து துளியும் விலகாத, மக்கள் நலனே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மறுமலர்ச்சி தி.மு.க. வின் தலைமையில் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது...
No comments:
Post a Comment