Sunday, October 26, 2008

பச்சைத் துரோகி க(லைஞ)யவன்(ர்?) கருணா(நிதி)

தமிழர் இதயத்திலெல்லாம் இடியை இறக்கி விட்டான்(ர்?). நெஞ்சைப் பிளந்து நெருப்பை திணித்து விட்டான்(ர்?). பதவிப் பிச்சைக்காக தமிழர் நலனை அடகு வைத்து விட்டான்(ர்?)















தமிழகத்தில் வைகோ, பழ,நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் இன்னும் பல தமிழ் உணர்வாளர்கள் சிறுகச் சிறுக குருவிபோல திரட்டி கட்டிக் காத்து வந்திட்ட தமிழின உணர்வையும் தமிழீழ ஆதரவையும் நயவஞ்சகமாகக் கவர்ந்து காங்கிரசின் காலடியில் தன் பதவியைக் காத்துக் கொள்வதற்காக காவு கொடுத்துவிட்டான்(ர்?).



வைகோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்ததற்கு துரோகப் பட்டம் கட்டி கலைஞனுக்கு காவடி எடுத்தன வலையுலகக் கழகக் குஞ்சுகள்.



இப்போது எங்கே போய் வைத்துக் கொள்ளப் போகிறீர்கள் உங்கள் முகங்களை?



அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துக் கொண்ட தீர்மானங்களுக்கு மாறாக, தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என அறிவித்துள்ளான்(ர்?) இந்த கட்டையில் போகிற கருணாநிதி.

இவன்(ர்?) கட்டையில் போகிற காலத்தில் த்மிழர் நலனையும் சேர்த்து புதைத்து விட எண்ணியுள்ளாரோ என்னவோ?



இலங்கையின் ஊதுகோலாக வந்த பிரணாப் முகர்ஜி கொடுத்த வாய்மொழி உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு தமிழர் நலனை காவு கொடுத்துள்ளான்(ர்?) இந்த தமிழினத் தலைவர் வேடம் போட்டு டெல்லியிடம் காட்டிக் கொடுத்த துரோகி...



தமிழர் இதயத்திலெல்லாம் இடியை இறக்கி விட்டான்.
இதற்கு மேல் எழுத முடியவில்லை....

படிக்கவும்.

ஐ.பி.என். செய்தி:  DMK MPs won't quit over Lankan issue: TN CM



காட்டிக் கொடுப்பவன் எங்கே?

அந்தக் கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி!
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!
பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

19 comments:

குப்பன்.யாஹூ said...

பதவி எங்களுக்கு துண்டு போல என்று சொன்ன அண்ணா எங்கே.

காங்கிரசும் கூட்டணியை விட்டு ஓடி விடுவார்களோ என்று கவலை கொள்ளும் கலைஞர் எங்கே.

what a great leader, what a mighty feel.

shabi said...

en intha sottayanukku mariyadhai veru

யட்சன்... said...

உங்களையெல்லாம் பார்த்தா பாவமாயிருக்கு....ம்ம்ம்ம்

என்னவோ அவர் இன்னிக்குத்தான் இந்த மாதிரி அரசியல் பன்ற மாதிரி ஃபீலாவறீங்க....

கடைசியா ஒன்னு...

“யாகாவராயினும் நாகாக்க....”

SurveySan said...

மரியாதைக் குறைவுகளை தவிர்த்திருக்கணும்.


இது நமுட்டு சிரிப்பை வரவழைத்தது. அப்பரம் என்னா கருமாந்திரத்துக்கு பதினெட்டு பட்டியும் கூட்டி ஒக்கார வச்சு decisions எடுக்கணும்?:
///The decision to withdraw all the MPs from Tamil Nadu was taken at the all-party meeting.


''Some parties seem to have a second thought on it. We too have second thoughts,'' he said.
///

வசந்தத்தின் தூதுவன் said...

கலைஞர் குடும்பத்திற்கு சொம்பெடுத்து பின் செல்லும் சிலர் வைகோ போன்றோரின் அர்ப்பணிப்பை கேலி செய்ததே இது போல ஒரு கடுமையான பதிவை எழுதத் தூண்டியது.

இப்போது உண்மையிலேயே தொடர்ந்து போராடி வரும் வைகோவிற்கு தீவிரவாதி பட்டம் கட்டி உள்ளே தள்ளிவிட்டாகி விட்டது. தட்டிக் கேக்க ஆள் இல்லை..

பேசினால் வாய்ப் பூட்டு. போராடினால் அடக்குமுறை. ஈழத்தமிழரின் உரிமைப் போருக்கான ஆதரவை நீர்த்துப் போகச் செய்ய காங்கிரசின் கைக்கூலியாகச் செயல்படும் தமிழினத் தலைவரை என்னவென்று சொல்வது.

Anonymous said...

விட்டுடுங்க -
இந்த இடைவெளியை பயன்படுத்தி ஈழமா.. அது என என்றிருந்த இளைய தமிழகத்திற்கு சில செய்திகளை சொல்லியாயிற்று.

சரி ஐயா..
ஏதோ உணவு அனுப்புகிறார்களாம். ம்.. செத்து போகும் வரை சாப்பாடாவது கிடைக்கட்டும்.

Unknown said...

பச்சை துரோகம் இன்னும் ஒரு முறை, ஓக்னேக்கல் விடயத்திலும் இதே துரோகம்

Unknown said...

எதிர்பார்த்த செய்தி தான் என்றாலும் ஏமாற்றத்தை தவிர்க்க இயலவில்லை.
இயலாமையால் நெஞ்சம் கணக்கிறது.

வாழ்க கலைஞர்!

Anonymous said...

தெய்வமே!
இது என்ன சோதனை!?

Anonymous said...

கருணாநிதி கயவன் என்பது இப்போதாவது சிலருக்கு புரிந்தால் சரி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கடுமையான சொற்களைத் தவிர்த்திருக்கலாம்.

போனவாரம் அரசியல் காய் நகர்த்தல் என்கிற பதிவை நான் இட்டபோது நிறைய பதிவர்கள் வருத்தம் தெரிவித்தார்கள். சிலர் நான் அரசியல் செய்வதாகச் சொன்னார்கள். நான் அரசியல் செய்தால் நீர்த்துப் போகும். ஆட்சியாளர்கள் அரசியல் செய்துவிடக் கூடாது என்றுதான் இந்த பதிவிட்டிருக்கிறேன் என்று தெரிவித்தேன்.

இப்போது அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது.

Anonymous said...

முக்கிய செய்தி:

இந்திய அரசு இந்தியப் பல்கலைக்கழகமொன்றில் இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு டாக்டர் பட்டம் வழங்க அவசர ஏற்பாடு செய்கின்றது.

பாவம் மழையில் நனைந்த மக்கள்.

புள்ளிராஜா

வசந்தத்தின் தூதுவன் said...

//ஏதோ உணவு அனுப்புகிறார்களாம். ம்.. செத்து போகும் வரை சாப்பாடாவது கிடைக்கட்டும்.
//


இதற்கும் கூட எவராவது சப்பைக் கட்டு கட்டக் கூடும். இதற்கு முன்னர் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்புவதற்காக அய்யா பழ.நெடுமாறன், வைகோ போன்றோர் சேர்த்து வைத்திருந்தபோது அதை அனுப்ப விடாமல் தடுத்தவர் கருணாநிதி. இதனை எதிர்த்து பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்த போது அவருக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியவர் கருணாநிதி.

இப்போது செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் ஐ.நா. அமைப்புக்கள் வெளியேறிய பின் இலங்கை ராணுவத்தின் கையில் கொடுக்க பேரம் பேசியுள்ளார்.

sathiri said...

http://sathirir.blogspot.com/

Anonymous said...

My Dear Friend you are well said

the real face of TN cm.

“யாகாவராயினும் நாகாக்க....”

why should we give respect to him ?

shit.

வசந்தத்தின் தூதுவன் said...

//“யாகாவராயினும் நாகாக்க....”
//
இது கலைஞருக்கு சொன்னதுன்னு நினைக்கிறேன்..

Anonymous said...

I was expecting these drama. But yet dissapointed cos I didnt expect this will end up very soon. Anyway many people in TN knew something about the eelam. And We need to thank for the people who were tinking about eelam people.

களப்பிரர் - jp said...

இயலாமையால் நெஞ்சம் கணக்கிறது.

http://tamilkuruthi.blogspot.com/

சவுக்கடி said...

பொதிகை!

உங்கள் உணர்வு வெளிப்பாடு மெய்த்தமிழ் உணர்வாளர் உணர்வோடு மிகப்பெரும்பான்மையும் ஒத்திருக்கின்றது.