Wednesday, October 1, 2008

கருணாநிதிக்கு காது வேலை செய்கிறதா? - செய்தி

காட்டிக் கொடுப்பவன் எங்கே?
அந்தக் கயவனை கொண்டு வா!
தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி!
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
அன்னைத் தமிழை மறந்தான்!
பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்!
தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!
மாற்றார்க் கழைப்பு விடுத்தான்!
வீட்டில் மதுவும் கொடுத்தான்!
மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்!
மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!
பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை!
எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!
- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

இந்தக் கவிதைக்கும் கலைஞர் மு.கருணாநிதிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. நீங்களாக தொடர்பு படுத்திக் கொண்டால் அதற்கு யாரும் பொறுப்பில்லை. உங்கள் கற்பனை மட்டுமே பொறுப்பு.

இலங்கை தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர் ராமதாசு கேள்வி.. பின் வருமாறு..

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது. தமிழன் தூங்குகிறான். அங்கு போடப்படும் குண்டுகளின் சத்தம் முதல்-அமைச்சர் கருணாநிதியின் காதில் விழவில்லையா?.




நீங்கள் 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளீர்கள். 6-வது முறையாகவும் நீங்கள் ஆளுவதற்கு நாங்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், ஈழ தமிழகம் மலரும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். தமிழக மீனவர்கள் அனைவரும் படகுகளை எடுத்துக்கொண்டு இலங்கை செல்வோம். அங்குள்ள சிங்களர்களை ஒரு கை பார்ப்போம்.



விடுதலைப்புலிகளை ஆதரித்ததால் அன்று மத்திய அரசு ஆட்சியை கலைத்துவிட்டதாக கூறினீர்கள். இப்போது, மத்தியிலும் உங்களது தயவில்தானே ஆட்சி நடக்கிறது. இப்போது அந்த பிரச்சினை குறித்து பேசவேண்டியது தானே?. அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா என்ன?. நீங்கள் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் பேசுவதை உலக தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் வாய் சொல்தான் அருமருந்து. உடனே, இலங்கை தமிழர் பிரச்சினையில் தலையிடுங்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களே 10 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுங்கள்.



தி.மு.க. எம்.பி.க்கள், மற்றும் பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் அடங்கிய 10 பேர் குழுவை இலங்கையில் உள்ள வவுனியாவுக்கு அனுப்புங்கள். அவர்கள் அங்குள்ள உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு சொல்லட்டும்.



தற்போது சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ள ரேடார் கருவி முப்பரிமானம் கொண்டது. இது இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியை மட்டும் அல்லாமல், தென் இந்தியாவையும் காட்டிக் கொடுக்கும். அது முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும், உளவுப் பிரிவுக்கும் தெரியாதா?.



இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்காவிட்டால் கருஞ்சட்டை படைகள் 1,000 பேர் ஒன்றிணைந்து சென்னை தீவுத்திடலில் தீப்பந்தம் ஏந்தி, ஈழ தமிழர்களுக்காகவும், தமிழ் ஈழம் விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம்.



மேலும், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்குள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அவர்களை நீங்கள் உடனே கைது செய்து சிறையில் அடையுங்கள். விட்டு விடாதீர்கள். அடுத்து எங்கள் கட்சி எம்.பி.க்கள், இளைஞர் படையினர், மாணவர்கள் படையினர், மகளிர் படையினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் சிறையில் அடையுங்கள். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் சேர்ந்து, இலங்கை அரசை கண்டித்தும், தமிழ் ஈழத்தை ஆதரித்தும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் இந்திய அரசு ஒப்புதல் தரும்.



உடனே, ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவெடுங்கள். தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்.
 
- அதிகாலை.காம் செய்தி.
 
 

6 comments:

Anonymous said...

அட நீங்க வேற நேரம் காலம் புரியாம, தானைத்தலைவர் அவர்கள்
சிறப்பு மானாட மயிலாட பார்ட் 3-க்கு குஷ்பு, ரம்பாவுடன் தீவிர ஆலோசனையில் இருக்கும்போது, இதற்க்கெல்லாம் அவருக்கு ஏது நேரம்....

Anonymous said...

தமிழீழம் குறித்து 6-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக கருணாநிதி அறிவித்துள்ளார். அந்தக்கூட்டத்தில் தமிழீழத்திற்கான சொர்க்க வாசல் திறக்கப்படும் என்று நம்பி யாரும் ஏமாந்துவிடவேண்டாம்.

அந்தக்கூட்டத்தில் இதுதான் நடக்கும்;

1. கருணாநிதியின் அடிமைகளால் கருணாநிதி புகழ்பாடப்படும். அரசியல் எதிரிகள் இழிவு படுத்தப்படுவார்கள்.

2. தமிழையும் தமிழனையும் காப்பாற்ற கருணாநிதியை விட்டால் வேறு யாரும் இல்லை என்று பேராசிரியர் பேசுவார். (கருணாநிதியை நம்பி அவர் தொடர்ந்து ஏமாறுவது போல் தமிழர்களும் ஏமாறாமாட்டர்கள்)

3. கருணாநிதி அவர்கள் பேசும் போது, ஈழ வரலாற்றை பேசுவார், ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி பேசுவார், அவருக்கு வேண்டியவர்களையும் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களையும் போராளிகளாகக் காட்டி அவர்களுடன் விடுதலைப் புலிகளையும் இணைத்துக்கொள்வார், வாழக்கம்போல் அரசியல் எதிரிகளை குறிப்பாக மருத்துவர் இராமதாசு அவர்களை தவறாமல் இழிவுபடுத்துவார், முடிவாக நடுவண் அரசோடு பேசி நல்லமுடிவு எட்டப்படும் என்று அறிவித்துவிட்டு கதைவசனம் எழுத கிளம்பிவிடுவார்.

2.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இன்னும் ஒன்றும் காலம் கெட்டுப் போய் விடவில்லை. இப்போதாவது கலைஞர் களத்தில் இறங்கி எல்லா தமிழ் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழீழம் மலர ஒத்துழைக்கவேண்டும். ஒகெனக்கல் பிரச்சினையில் கர்னாடக தேர்தலுக்குப் பின் என்று தள்ளிப் போட்டு அங்கே பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து இப்போது அந்த திட்டம் கேள்விக் குறியாக மாறி விட்டது. அதேபோல அடுத்த நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் இவர்கள் கூட்டணி வெற்றிபெறப் போவதில்லை. கருணாநிதியின் வாழ்க்கையில் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு இதுவே. இன்னும் நூறாண்டு இவர் வாழ்ந்து தமிழினத் தொண்டு(???) செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் இயற்கையை வெல்ல யாராலும் முடியாது. ஏற்கனவே சராசரி தமிழனின் ஆயுள் ஆண்டுகளின் எண்ணிக்கையைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. என்வெ இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி வரலாற்றில் இடம் பெற வேண்டும்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்தில் தமிழரல்லாத எம்.ஜி.ஆர். இந்திரா ஆகியோர் பெயர் பெற்ற அளவுக்கு இவர் ஏதும் செய்ய வில்லை. ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லவில்லை என்று. இதுவே ஒரு தமிழினத் துரோகம் தான். அங்கே ஈழத்தில் இருக்கும் தமிழர் அனைவரும் இந்திய ராணுவத்தை திரும்பிப்போ.. திரும்பிப்போ.. என்க் கூறி அனுப்பிவைக்க,,
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர் அனைவரும் திரும்பி வந்துவிடு..திரும்பி வந்துவிடு..என்று அழத்துக் கொண்டிருக்க இவர் மட்டும் திரும்பி வருபவர்களை வரவேற்காமல் கவிதை எழுதி கண்ணீர் வடித்ததிலேயே எதோ உள்குத்து இருப்பது போல தோன்றுகிறது. அப்படி ஏதும் உள்குத்து இல்லை என நிரூபிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது

ஆட்காட்டி said...

வேறு ஏதாவது உருப்படியா, நடக்குற காரியமா யோசியுங்கோ. மண்டை வலியாவது மிஞ்சும்/.

வசந்தத்தின் தூதுவன் said...

அனானி, சிவா, கரிகாலன், பின்னூட்டம் பெரியசாமி,ஆட்காட்டி

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.