Tuesday, December 7, 2010

இத்தனை நாளாய் ம.தி.மு.கவில் தான் இருந்தேன்: தாணு ஒப்புதல்!

பெரும்பாலான கறுப்பு ஆடுகள் களையெடுக்கப் பட்டுவிட்ட போதும் வெகு சில ஆடுகள் இன்னும் மந்தைக்குள் இருக்கத்தான் செய்கின்றன. அவை எவை என்பது மேய்ப்பனுக்கு நன்றாக தெரிந்தே இருக்கிறது. கூட்டமாகத் துரத்தியபோது செல்லாத ஒற்றைக் கருப்பாடு இப்போது வேடம் கலைத்திருக்கிறது.

கலைப்புலி தாணு அவர்கள் ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்ததில் இருந்து அவர் இத்தனை நாளாக ம.தி.மு.க.வில் தான் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தபோது பத்திரிக்கையாளர் சுதாங்கன் அவரை, நீங்கள் ம.தி.மு.க. வில் இருக்கிறீர்களா? எனத் துருவித் துருவிக் கேட்டபோதும் மழுப்பலான பதிலையே தந்தார். இப்போது என்னவோ தான் ம.தி.மு.க. வில் தான் இருந்ததுபோல விலகல் கடிதம் கொடுத்துள்ளார்.

வசந்தத்தின் தூதுவன் வைகோ இவருக்கு சட்டமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பளித்ததையே கொச்சைப் படுத்தி, வைகோ இவரிடம் மட்டுமல்லாமல் இவர் வீட்டு உறுப்பினர்களிடமும் போய் கெஞ்சியதாகக் கூறியவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவரை நிற்கச் சொல்லி கெஞ்சியதாக கூறுபவர் எப்படி இவரை வைகோ முன்னிலைப் படுத்தவில்லை என்று கூற முடியும்?

நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததே நான்கு இடங்கள். ஒன்றில் வைகோ வும், ஒன்றில் கணேசமூர்த்தி எம்.பி அவர்களும், ஒன்றில் முன்னாள் பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன் அவர்களும் மற்றதில் துணைப் பொதுச்செயலாளர் துரை பால கிருஷ்ணனும் போடியிட்டனர். இவர்களில் எவர் தகுதியற்றவர்? தகுதியுடையோர் எண்ணற்றவர்கள் இருப்பினும் இடம் கிடைக்காததுதான் குறை. இதில் இவர் சம்பத்துக்கு இடமளிக்கவில்லையென கேள்வி கேட்டாராம் வைகோ கோபித்துக் கொண்டாராம். நல்ல கற்பனை.

கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் நடந்த பல போராட்டங்களுக்கு இவர் தலைமையேற்பார் என தலைமைக் கழகம் அறிவித்தும் போராட்டக் களங்களில் இவர் தலையே காட்டவில்லை. இவர் தலையே காட்டாத போது மீண்டும் மீண்டும் இவர் பெயரை முன்னால் போட்டு மூக்கறுபட முடியுமா?  மாநாட்டுக்கு அழைக்கவில்லையென குற்றம் சொல்கிறீர்களே? மாநாட்டுக்கு யார் அழைக்கவேண்டும்? வைகோ வந்து உங்கள் வீட்டில் வெற்றிலை பாக்கு வைக்க வேண்டுமோ? அப்படி வைகோ செய்தாலும், வைகோ என் வீட்டில் வந்து கெஞ்சி மாநாட்டுக்கு அழைத்தார் அதனால் போனேன் என்று கொச்சைப் படுத்த வாய்ப்பில்லாமல் போனதற்காக வருந்துகிறீர்களா?

சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நீங்கள் கருணாநிதியிடம் விலை போய்விட்டது வைகோவிற்கும் தெரியும் ம.தி.மு.க. தொண்டனுக்கும் தெரியும் தாணு அவர்களே.

உங்களுக்கு உங்கள் தொழிலை நடத்த கருணாநிதியின் தயவு தேவை. சில நாட்களுக்கு முன் வெளிவந்த உங்கள் திரைப்படம் ஒன்றை கருணாநிதி குடும்ப ஊடக நிகழ்ச்சிகள் மூலம் தூக்கி நிறுத்தினீர்களே அது போல. அதைச் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு போகிற போக்கில் வரலாற்று நாயகன் வைகோ மீது சேற்றை வாரி இறைப்பானேன்?

வைகோ அவர்கள் உங்களுக்கு செய்த உதவிகளில் பகுதியளவே எங்களுக்குத் தெரியும். முழு அளவும் உங்களுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் தாணு அவர்களே.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

Tuesday, November 30, 2010

வலைப்பதிவர்களுக்கு வைகோ எச்சரிக்கை !!!

தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த ஈகிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் கடந்த 27ம் நாள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு, மாநாடு போல நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் இணையத்தைப் பயன் படுத்துகிறவர்கள் என்பதைப் புரிந்து கொண்ட வைகோ அவர்கள், சில வலைப் பதிவுகளில் பதிவர்கள் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப் படுத்தும் வகையில் தவறான செய்திகளை வெளியிட்டு ராசபக்சேவுக்கு உதவும் வகையில் செயல் பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தமிழ் வலைப் பதிவர்களும் இணையதளங்களைப் பார்வையிடும் தமிழர்களும் அவர்களை இனம் கண்டு புறக்கணிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்களும், அய்யா பழ.நெடுமாறன் அவர்களும் ஆற்றிய உரைகளை இறக்கம் செய்து முழுவதுமாக கேட்க பின்வரும் தொடுப்புகளை சொடுக்கவும்.

மாவீரர் நாள் 27-11-2010 அன்று

வரலாற்று நாயகன் வைகோ அவர்கள் பேச்சு பகுதி I

http://www.mediafire.com/?1cddj002pvxr1l7




வசந்தத்தின் தூதுவன் வைகோ பேச்சு பகுதி II

http://www.mediafire.com/?25ers82v0qcht92

மாவீரன் பழ.நெடுமாறன் அவர்கள் பேச்சு

http://www.mediafire.com/?khade85j0ewrwgt

Monday, November 22, 2010

சென்னையில் நவ-27ல் மாவீரர் நாள் பொதுக்கூட்டம்.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் – உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.


உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்

தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் – எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

எழுதியவர்: கவிஞர் புதுவை.ரத்தினதுரை

தமிழீழம் பெறும் நோக்கில் தங்கள் இன்னுயிரை ஈந்த ஈகியரை நினைவுகூரும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்ப் இயக்கத்தின் சார்பில் நவம்பர் 27 சென்னையில் தியாகராய நகர் பேரூந்து நிலையம் அருகில், முத்துரங்கன் சாலையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டமும் நினைவஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. வசந்தத்தின் தூதுவன் வைகோ, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, ஆவடி மனோகரன், பெ.மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். அனைவரும் வருக. தமிழுணர்வு பெறுக.

Thursday, November 18, 2010

காஞ்சி மாநாட்டில் வைகோ ஆற்றிய எழுச்சியுரை ஒலி வடிவில்

கடந்த செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கம் செய்க..

வைகோ உரை - பாகம் I
வைகோ உரை - பாகம் II
வைகோ உரை - பாகம் III
வைகோ உரை - பாகம் IV



 

Wednesday, November 17, 2010

பூமராங்காய்த் திரும்பும் அலைவரிசை ஊழல்: தப்பிக்குமா கருணாநிதி குடும்ப சாம்ரஜ்யம்?

கருணாநிதி இன்னும் நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். அவரது கண் முன்னாலேயே, அவர் கட்டியமைத்த, அவரது குடும்ப சாம்ராஜ்யம் சிதறி சின்னாபின்னமாவதைக் காணவாவது கருணாநிதி நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். இவை அண்ணா பிறந்த நாளில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. வின் மாநாட்டில் வசந்தத்தின் தூதுவன், வரலாற்று நாயகன் வைகோ எழுச்சியுரையின் போது குறிப்பிட்டவை.

சில காலம் முன்பு வரை கருணாநிதியின் குடும்ப சாம்ராஜ்யம் சின்னாபின்னமாக, கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதுமா  “இன்னும்” நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா என்ற அய்யம் இருந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான, விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் நீதித் துறையின் மீது மக்கள் வத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை முறையான காரணமில்லாமல் நீடித்து வருவதை தமிழர் இதயம் வைகோ அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்ததும், குறுக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியங்கள் பதிலளிக்கத் திணறியதும் நாடறிந்தது. இருந்தும் விசாரணையை ஒருதலைப் பட்சமாக நடத்தி முடித்து தீர்ப்பையும் வழங்கி விட்டது. வழக்கு விசாரணைகள் இதே கதியில் இருந்தால் இன்னும் நூறாண்டுகள் காத்திருந்தாலும் ஊழல் வழக்குகளின் கருணாநிதி குடும்பத்தினர் தண்டிக்கப் பட முடியாமலேயெ போய் விடுமோ என்ற எண்ணம் வந்தது.

நீதித் துறையின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயிருப்பதை சிலநாட்கள் நடை பெற்ற காவல் துறையின் செயற்கையான மோதல் கொலையை பெருவாரியான மக்கள் தவறென்றறிந்தும் ஆதரித்தலிருந்து அறியலாம். யாருமற்ற ஒரு ஒற்றை மனிதனுக்கு எதிரான குற்றங்களையே நிரூபணம் செய்து தண்டனை வாங்கித்தர இயலாத புலனாய்வுத் துறையும், நீதித் துறையும், ஊழலில் துறை போகிய கருணாநிதி குடும்பத்தின் கொட்டங்களை வெட்டவெளிச்சமாக்கி தண்டனை பெற்றுத் தருமா என்கிற அய்யம் அத்தனை தமிழர்கள் மனதிலும் உள்ளதை மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இவர்கள் கொடுக்கும் கையூட்டைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து மீண்டும் இவர்களையே பதவியிலமர்த்தும் மன ஓட்டம் மக்களுக்கு வருவதற்கு அடிப்படைக் காரணமே மேற்சொன்ன துறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்ததுதான். எப்படியும் இவர்களைத் தண்டிக்க முடியாது,  வேண்டுமளவு அவர்கள் எடுத்துக் கொண்டு நமக்குத் தந்தால் அவர்களையே ஆதரிப்பதில் தவறென்ன? அதிலும் இவர்கள்தான் தான் இலவசப் பிச்சைகளில் அனைவரையும் மிஞ்சியவர்கள் என்கிற மன நிலை மக்கள் மனதில் மிகுதியாகியுள்ளது.

ஆனால் தமிழக முதல்வர்கள் வரலாற்றில் ஓமந்தூரார் தொடங்கி ஜெயலலிதா வரையிலான முதல்வர்களில் தன் குடும்பத்தை அமைச்சர் பதவிகளிலும் கட்சிப் பதவிகளிலும் அமர வைத்து ஊழலைப் பரவலாக்கி, அதையே நியாயப் படுத்தி வருவதில் கருணாநிதிக்கு எவரும் நிகரில்லை. தமிழகத்தைத் தற்போது சூழ்ந்துள்ள ஆபத்து முன்னெப்போதும் இல்லாதது. எனவே இதனைத் தகர்க்கும் உத்திகளை புதிதாகவே வடிவமைக்க வேண்டியுள்ளது.

மக்கள் ஆற்றலின் மூலம் எத்தகைய ஊழல் பேர்வழிகளையும் தெருவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது மக்கள் தலைவர் மேடைதோறும் முழங்கி வரும் முழக்கமாகும். மக்களாற்றலைத் திரட்டவே கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைச் சந்தித்து ஊழல் பேர்வழிகளுகெதிராக மக்களைத்  திரட்டிவருகிறார்.
மக்களைத்   திரட்டுவது ஒரு வழியென்றால், இதே நோக்கமுள்ள மற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி ஆதிக்கவாதிகளின் சதிகளை முறியடித்து வெற்றி பெறமுடியும். பொதுவுடமை இயக்கங்களும் பா.ச.க.வும் எதிரெதிர் துருவங்களாயிருப்பினும் ஊழலுக்கெதிராய் ஒரே குரலில் ஒலித்த்தன் மூலமே இது சாத்தியமாயிற்று. மறுமலர்ச்சி தி.மு.க.வின் கூட்டணி தந்திரங்களும் இதையொட்டியே இருக்கும்.

அனைவரும் சொல்வதுண்டு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையில்லை, அவர்கள் சரியில்லை என்று. அலைவரிசை ஊழலைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகள் மக்களாட்சியின் மாண்பை உண்மையாக்கியுள்ளனர். ஆகவே தமிழர்கள் அனவரும் மக்களாட்சியின் மீதும், தலைவர் வைகோ மீதும் நம்பிக்கை வைத்து மறுமலர்ச்சி தி.மு.க. வுடன் கைகோர்க்க வேண்டும்.



அரசியல் தலைவர்கள் ஒன்றே முக்கால் லட்சம் கோடிகள் ஊழல் செய்த கொள்ளைக்காரனை பதவி நீக்கம் செய்ய வைத்திருக்கிறார்கள். இப்போது பந்து புலனாய்வுத் துறை மற்றும் நீதித் துறைகளின் கையில். அரசியல் தலைவர்களும் நீதி கிடைக்கும் வரை ஓய்ந்து விடக் கூடாது.

கொள்ளைக் காரனைப் பதவி நீக்கம் செய்தால் மட்டும் பத்தாது, ராசா உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். மோசடி செய்த சத்யம் நிறுவன தலைமை அதிகாரி சிக்கியவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இப்படிப் பட்ட மோசடிப் பேர்வழிகளின் துணிச்சலே மோசடி செய்த பணத்தை வைத்தே தப்பி விடலாம் என்பதுதான். இல்லையென்றால் பதவிக்கு வந்தவுடன் முடிந்தவரை கொள்ளையடித்து விட்டால் பின்னர் பதவி போனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விடும்.

கொள்ளையடித்த பணத்தில் கருணாநிதியின் குடும்பத்திலும், தி.மு.க.விலும், காங்கிரசிலும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு சென்றது என்பதைக் கண்டறிந்து சிறையிலிட வேண்டும். இவர்களை சிறையிலிட்டால் மட்டுமே விசாரணையில் இவர்கள் தலையீடின்றி செவ்வனே செய்ய இயலும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் எவ்வளவு கோடிகள் செலவிடப் பட்டது. கொள்ளைப் பணத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கருணாநிதி கட்டியமைத்த குடும்ப சாம்ராஜ்யம் அவரது கண்முன்னே தூள்தூளாக வேண்டும்.

Wednesday, July 21, 2010

வலைப் பதிவர் சவுக்கு கைது! கருணாநிதி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

தமிழ் வலைப் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் சவுக்கு. இவர் கருணாநிதி அரசின் தமிழர் விரோதப் போக்கைத் தோலுரித்துக் காட்டியதுடன், தமிழக அரசு தனது எந்திரங்களை எவ்வாறெல்லாம் தனது தன்னலத்திற்காகவும் மக்களுக்கெதிராகவும் திருப்பி விடுகிறது என்பதை தனது பதிவுகள் மூலம் அக்கு வேறாகவும், ஆணி வேறாகவும் பிய்த்து தனது வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் படிப்போர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் தனது வலைப் பதிவில் கருணாநிதி அரசுக்கு கவுண்ட் டவுன் பகுதியை வெளியிட்டுள்ளார்.
http://www.savukku.net/

கருணாநிதியின் தமிழர் விரோதப் போக்கைப் புள்ளி விபரங்களுடன் விவரித்து வந்தார்.

இணைய உலகில் கருணாநிதியை அனைவரும் காரி உமிழ்ந்து வருவது அனைவரும் அறிந்த்ததே. இணைய உலகில் எழுந்து வரும் எதிர்ப்புகளைப் பொறுக்க மாட்டாத கருணாநிதி அரசு தன் ஏவல் துறையை ஏவி எழுத்தாளர் சவுக்கைக் கைது செய்து தன் கையாலாகாத் தனத்தைக் காட்டியுள்ளது. எழுத்தாளர் சவுக்கு, இணையத்தில் மட்டுமல்லாது அனைத்து பத்திரிக்கைத் துறையிலும் தொடர்பு வைத்துள்ளவர். இவரது கைது எழுத்துரிமைக்கு விடப்பட்ட பெரும் சவால். தானும் எழுத்தாளர், கவிஞர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி தனக்கு எதிராக வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு பதறுவது ஏன்?

கருணாநிதியின் இத்தகைய செயலைக் கண்டு அனைத்து வலைப் பதிவர் களும் கொதித்து போயுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் சவுக்கு அவர்களின் வலைப்பதிவில் இருக்கும் கவுண்ட் டவுன் போல கருணாநிதியின் நாட்கள் எண்ணப் பட்டு வருகின்றன. அது சுழியை எட்டும் போது கருணாநிதி ஆட்சியில் இருக்கப் போவதில்லை. அவர் இருக்குமிடம் சவுக்கு இப்போது இருக்கும் சிறையறையாகக் கூட இருக்கலாம்.

Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டைத் தாக்குவதா? தமிழினத் துரோகி கருணாநிதிக்கு கண்டனம்

பச்சைத் தமிழர் பழ.கருப்பையா நல்ல தமிழில் பேசக் கூடியவர். தனித்தமிழில் பேசியும் எழுதி வந்தவர். செட்டிநாட்டு பின்புலத்தில் இருந்து வந்து தமிழர் பண்பாட்டை பாரறிய பரப்பி வந்தவர். தமிழினத் துரோகி கருணாநிதியின் கயமைத் தனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களிலும், தொலைக்கட்சிகளிலும் கருத்துரை வழங்கிவந்தார். அவருடைய கருத்துரைகள் தமிழ் மக்களையெல்லாம் வெகுவாக ஈர்த்துவந்தது.




இந்நிலையில் கருணாநிதியின் கபட வேடங்களையும், செம்மொழி நாடகத்தையும் பற்றி பகிரங்கமாக நேர்காணலிலும், கட்டுரைகளில் எழுதி வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி கும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மக்களாட்சியின் மீது அக்கறை கொண்ட எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இந்த செயல் கருணாநிதியின் அழிவையே காட்டுகிறது.



மக்கள் விரோத கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஆட்டோ வருமா? அல்லது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவு விரைவில் வருமா?