Wednesday, November 17, 2010

பூமராங்காய்த் திரும்பும் அலைவரிசை ஊழல்: தப்பிக்குமா கருணாநிதி குடும்ப சாம்ரஜ்யம்?

கருணாநிதி இன்னும் நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். அவரது கண் முன்னாலேயே, அவர் கட்டியமைத்த, அவரது குடும்ப சாம்ராஜ்யம் சிதறி சின்னாபின்னமாவதைக் காணவாவது கருணாநிதி நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். இவை அண்ணா பிறந்த நாளில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. வின் மாநாட்டில் வசந்தத்தின் தூதுவன், வரலாற்று நாயகன் வைகோ எழுச்சியுரையின் போது குறிப்பிட்டவை.

சில காலம் முன்பு வரை கருணாநிதியின் குடும்ப சாம்ராஜ்யம் சின்னாபின்னமாக, கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதுமா  “இன்னும்” நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா என்ற அய்யம் இருந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான, விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் நீதித் துறையின் மீது மக்கள் வத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை முறையான காரணமில்லாமல் நீடித்து வருவதை தமிழர் இதயம் வைகோ அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்ததும், குறுக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியங்கள் பதிலளிக்கத் திணறியதும் நாடறிந்தது. இருந்தும் விசாரணையை ஒருதலைப் பட்சமாக நடத்தி முடித்து தீர்ப்பையும் வழங்கி விட்டது. வழக்கு விசாரணைகள் இதே கதியில் இருந்தால் இன்னும் நூறாண்டுகள் காத்திருந்தாலும் ஊழல் வழக்குகளின் கருணாநிதி குடும்பத்தினர் தண்டிக்கப் பட முடியாமலேயெ போய் விடுமோ என்ற எண்ணம் வந்தது.

நீதித் துறையின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயிருப்பதை சிலநாட்கள் நடை பெற்ற காவல் துறையின் செயற்கையான மோதல் கொலையை பெருவாரியான மக்கள் தவறென்றறிந்தும் ஆதரித்தலிருந்து அறியலாம். யாருமற்ற ஒரு ஒற்றை மனிதனுக்கு எதிரான குற்றங்களையே நிரூபணம் செய்து தண்டனை வாங்கித்தர இயலாத புலனாய்வுத் துறையும், நீதித் துறையும், ஊழலில் துறை போகிய கருணாநிதி குடும்பத்தின் கொட்டங்களை வெட்டவெளிச்சமாக்கி தண்டனை பெற்றுத் தருமா என்கிற அய்யம் அத்தனை தமிழர்கள் மனதிலும் உள்ளதை மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இவர்கள் கொடுக்கும் கையூட்டைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து மீண்டும் இவர்களையே பதவியிலமர்த்தும் மன ஓட்டம் மக்களுக்கு வருவதற்கு அடிப்படைக் காரணமே மேற்சொன்ன துறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்ததுதான். எப்படியும் இவர்களைத் தண்டிக்க முடியாது,  வேண்டுமளவு அவர்கள் எடுத்துக் கொண்டு நமக்குத் தந்தால் அவர்களையே ஆதரிப்பதில் தவறென்ன? அதிலும் இவர்கள்தான் தான் இலவசப் பிச்சைகளில் அனைவரையும் மிஞ்சியவர்கள் என்கிற மன நிலை மக்கள் மனதில் மிகுதியாகியுள்ளது.

ஆனால் தமிழக முதல்வர்கள் வரலாற்றில் ஓமந்தூரார் தொடங்கி ஜெயலலிதா வரையிலான முதல்வர்களில் தன் குடும்பத்தை அமைச்சர் பதவிகளிலும் கட்சிப் பதவிகளிலும் அமர வைத்து ஊழலைப் பரவலாக்கி, அதையே நியாயப் படுத்தி வருவதில் கருணாநிதிக்கு எவரும் நிகரில்லை. தமிழகத்தைத் தற்போது சூழ்ந்துள்ள ஆபத்து முன்னெப்போதும் இல்லாதது. எனவே இதனைத் தகர்க்கும் உத்திகளை புதிதாகவே வடிவமைக்க வேண்டியுள்ளது.

மக்கள் ஆற்றலின் மூலம் எத்தகைய ஊழல் பேர்வழிகளையும் தெருவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது மக்கள் தலைவர் மேடைதோறும் முழங்கி வரும் முழக்கமாகும். மக்களாற்றலைத் திரட்டவே கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைச் சந்தித்து ஊழல் பேர்வழிகளுகெதிராக மக்களைத்  திரட்டிவருகிறார்.
மக்களைத்   திரட்டுவது ஒரு வழியென்றால், இதே நோக்கமுள்ள மற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி ஆதிக்கவாதிகளின் சதிகளை முறியடித்து வெற்றி பெறமுடியும். பொதுவுடமை இயக்கங்களும் பா.ச.க.வும் எதிரெதிர் துருவங்களாயிருப்பினும் ஊழலுக்கெதிராய் ஒரே குரலில் ஒலித்த்தன் மூலமே இது சாத்தியமாயிற்று. மறுமலர்ச்சி தி.மு.க.வின் கூட்டணி தந்திரங்களும் இதையொட்டியே இருக்கும்.

அனைவரும் சொல்வதுண்டு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையில்லை, அவர்கள் சரியில்லை என்று. அலைவரிசை ஊழலைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகள் மக்களாட்சியின் மாண்பை உண்மையாக்கியுள்ளனர். ஆகவே தமிழர்கள் அனவரும் மக்களாட்சியின் மீதும், தலைவர் வைகோ மீதும் நம்பிக்கை வைத்து மறுமலர்ச்சி தி.மு.க. வுடன் கைகோர்க்க வேண்டும்.



அரசியல் தலைவர்கள் ஒன்றே முக்கால் லட்சம் கோடிகள் ஊழல் செய்த கொள்ளைக்காரனை பதவி நீக்கம் செய்ய வைத்திருக்கிறார்கள். இப்போது பந்து புலனாய்வுத் துறை மற்றும் நீதித் துறைகளின் கையில். அரசியல் தலைவர்களும் நீதி கிடைக்கும் வரை ஓய்ந்து விடக் கூடாது.

கொள்ளைக் காரனைப் பதவி நீக்கம் செய்தால் மட்டும் பத்தாது, ராசா உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். மோசடி செய்த சத்யம் நிறுவன தலைமை அதிகாரி சிக்கியவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இப்படிப் பட்ட மோசடிப் பேர்வழிகளின் துணிச்சலே மோசடி செய்த பணத்தை வைத்தே தப்பி விடலாம் என்பதுதான். இல்லையென்றால் பதவிக்கு வந்தவுடன் முடிந்தவரை கொள்ளையடித்து விட்டால் பின்னர் பதவி போனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விடும்.

கொள்ளையடித்த பணத்தில் கருணாநிதியின் குடும்பத்திலும், தி.மு.க.விலும், காங்கிரசிலும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு சென்றது என்பதைக் கண்டறிந்து சிறையிலிட வேண்டும். இவர்களை சிறையிலிட்டால் மட்டுமே விசாரணையில் இவர்கள் தலையீடின்றி செவ்வனே செய்ய இயலும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் எவ்வளவு கோடிகள் செலவிடப் பட்டது. கொள்ளைப் பணத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கருணாநிதி கட்டியமைத்த குடும்ப சாம்ராஜ்யம் அவரது கண்முன்னே தூள்தூளாக வேண்டும்.

No comments: