Thursday, November 18, 2010

காஞ்சி மாநாட்டில் வைகோ ஆற்றிய எழுச்சியுரை ஒலி வடிவில்

கடந்த செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் வசந்தத்தின் தூதுவன் வைகோ அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரையை பின்வரும் இணைப்புகளில் பதிவிறக்கம் செய்க..

வைகோ உரை - பாகம் I
வைகோ உரை - பாகம் II
வைகோ உரை - பாகம் III
வைகோ உரை - பாகம் IV



 

Wednesday, November 17, 2010

பூமராங்காய்த் திரும்பும் அலைவரிசை ஊழல்: தப்பிக்குமா கருணாநிதி குடும்ப சாம்ரஜ்யம்?

கருணாநிதி இன்னும் நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். அவரது கண் முன்னாலேயே, அவர் கட்டியமைத்த, அவரது குடும்ப சாம்ராஜ்யம் சிதறி சின்னாபின்னமாவதைக் காணவாவது கருணாநிதி நூறு ஆண்டுகள் உயிர் வாழ வேண்டும். இவை அண்ணா பிறந்த நாளில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க. வின் மாநாட்டில் வசந்தத்தின் தூதுவன், வரலாற்று நாயகன் வைகோ எழுச்சியுரையின் போது குறிப்பிட்டவை.

சில காலம் முன்பு வரை கருணாநிதியின் குடும்ப சாம்ராஜ்யம் சின்னாபின்னமாக, கருணாநிதி நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதுமா  “இன்னும்” நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமா என்ற அய்யம் இருந்து கொண்டே இருந்தது. சில நாட்களுக்கு முன் வெளியான, விக்ரம்ஜித் சென் தலைமையிலான ஒரு நபர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் நீதித் துறையின் மீது மக்கள் வத்துள்ள நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை முறையான காரணமில்லாமல் நீடித்து வருவதை தமிழர் இதயம் வைகோ அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்து வைத்ததும், குறுக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியங்கள் பதிலளிக்கத் திணறியதும் நாடறிந்தது. இருந்தும் விசாரணையை ஒருதலைப் பட்சமாக நடத்தி முடித்து தீர்ப்பையும் வழங்கி விட்டது. வழக்கு விசாரணைகள் இதே கதியில் இருந்தால் இன்னும் நூறாண்டுகள் காத்திருந்தாலும் ஊழல் வழக்குகளின் கருணாநிதி குடும்பத்தினர் தண்டிக்கப் பட முடியாமலேயெ போய் விடுமோ என்ற எண்ணம் வந்தது.

நீதித் துறையின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து போயிருப்பதை சிலநாட்கள் நடை பெற்ற காவல் துறையின் செயற்கையான மோதல் கொலையை பெருவாரியான மக்கள் தவறென்றறிந்தும் ஆதரித்தலிருந்து அறியலாம். யாருமற்ற ஒரு ஒற்றை மனிதனுக்கு எதிரான குற்றங்களையே நிரூபணம் செய்து தண்டனை வாங்கித்தர இயலாத புலனாய்வுத் துறையும், நீதித் துறையும், ஊழலில் துறை போகிய கருணாநிதி குடும்பத்தின் கொட்டங்களை வெட்டவெளிச்சமாக்கி தண்டனை பெற்றுத் தருமா என்கிற அய்யம் அத்தனை தமிழர்கள் மனதிலும் உள்ளதை மறுக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் இவர்களின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இவர்கள் கொடுக்கும் கையூட்டைப் பெற்றுக் கொண்டு இவர்களுக்கே வாக்களித்து மீண்டும் இவர்களையே பதவியிலமர்த்தும் மன ஓட்டம் மக்களுக்கு வருவதற்கு அடிப்படைக் காரணமே மேற்சொன்ன துறைகளில் மக்கள் நம்பிக்கையிழந்ததுதான். எப்படியும் இவர்களைத் தண்டிக்க முடியாது,  வேண்டுமளவு அவர்கள் எடுத்துக் கொண்டு நமக்குத் தந்தால் அவர்களையே ஆதரிப்பதில் தவறென்ன? அதிலும் இவர்கள்தான் தான் இலவசப் பிச்சைகளில் அனைவரையும் மிஞ்சியவர்கள் என்கிற மன நிலை மக்கள் மனதில் மிகுதியாகியுள்ளது.

ஆனால் தமிழக முதல்வர்கள் வரலாற்றில் ஓமந்தூரார் தொடங்கி ஜெயலலிதா வரையிலான முதல்வர்களில் தன் குடும்பத்தை அமைச்சர் பதவிகளிலும் கட்சிப் பதவிகளிலும் அமர வைத்து ஊழலைப் பரவலாக்கி, அதையே நியாயப் படுத்தி வருவதில் கருணாநிதிக்கு எவரும் நிகரில்லை. தமிழகத்தைத் தற்போது சூழ்ந்துள்ள ஆபத்து முன்னெப்போதும் இல்லாதது. எனவே இதனைத் தகர்க்கும் உத்திகளை புதிதாகவே வடிவமைக்க வேண்டியுள்ளது.

மக்கள் ஆற்றலின் மூலம் எத்தகைய ஊழல் பேர்வழிகளையும் தெருவுக்கு கொண்டு வந்து விடலாம் என்பது மக்கள் தலைவர் மேடைதோறும் முழங்கி வரும் முழக்கமாகும். மக்களாற்றலைத் திரட்டவே கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைச் சந்தித்து ஊழல் பேர்வழிகளுகெதிராக மக்களைத்  திரட்டிவருகிறார்.
மக்களைத்   திரட்டுவது ஒரு வழியென்றால், இதே நோக்கமுள்ள மற்ற இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி ஆதிக்கவாதிகளின் சதிகளை முறியடித்து வெற்றி பெறமுடியும். பொதுவுடமை இயக்கங்களும் பா.ச.க.வும் எதிரெதிர் துருவங்களாயிருப்பினும் ஊழலுக்கெதிராய் ஒரே குரலில் ஒலித்த்தன் மூலமே இது சாத்தியமாயிற்று. மறுமலர்ச்சி தி.மு.க.வின் கூட்டணி தந்திரங்களும் இதையொட்டியே இருக்கும்.

அனைவரும் சொல்வதுண்டு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கையில்லை, அவர்கள் சரியில்லை என்று. அலைவரிசை ஊழலைப் பொறுத்த வரையில் அரசியல்வாதிகள் மக்களாட்சியின் மாண்பை உண்மையாக்கியுள்ளனர். ஆகவே தமிழர்கள் அனவரும் மக்களாட்சியின் மீதும், தலைவர் வைகோ மீதும் நம்பிக்கை வைத்து மறுமலர்ச்சி தி.மு.க. வுடன் கைகோர்க்க வேண்டும்.



அரசியல் தலைவர்கள் ஒன்றே முக்கால் லட்சம் கோடிகள் ஊழல் செய்த கொள்ளைக்காரனை பதவி நீக்கம் செய்ய வைத்திருக்கிறார்கள். இப்போது பந்து புலனாய்வுத் துறை மற்றும் நீதித் துறைகளின் கையில். அரசியல் தலைவர்களும் நீதி கிடைக்கும் வரை ஓய்ந்து விடக் கூடாது.

கொள்ளைக் காரனைப் பதவி நீக்கம் செய்தால் மட்டும் பத்தாது, ராசா உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்க வேண்டும். மோசடி செய்த சத்யம் நிறுவன தலைமை அதிகாரி சிக்கியவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இப்படிப் பட்ட மோசடிப் பேர்வழிகளின் துணிச்சலே மோசடி செய்த பணத்தை வைத்தே தப்பி விடலாம் என்பதுதான். இல்லையென்றால் பதவிக்கு வந்தவுடன் முடிந்தவரை கொள்ளையடித்து விட்டால் பின்னர் பதவி போனாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் அனைவருக்கும் வந்து விடும்.

கொள்ளையடித்த பணத்தில் கருணாநிதியின் குடும்பத்திலும், தி.மு.க.விலும், காங்கிரசிலும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு சென்றது என்பதைக் கண்டறிந்து சிறையிலிட வேண்டும். இவர்களை சிறையிலிட்டால் மட்டுமே விசாரணையில் இவர்கள் தலையீடின்றி செவ்வனே செய்ய இயலும்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் எவ்வளவு கோடிகள் செலவிடப் பட்டது. கொள்ளைப் பணத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

கருணாநிதி கட்டியமைத்த குடும்ப சாம்ராஜ்யம் அவரது கண்முன்னே தூள்தூளாக வேண்டும்.

Wednesday, July 21, 2010

வலைப் பதிவர் சவுக்கு கைது! கருணாநிதி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

தமிழ் வலைப் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் சவுக்கு. இவர் கருணாநிதி அரசின் தமிழர் விரோதப் போக்கைத் தோலுரித்துக் காட்டியதுடன், தமிழக அரசு தனது எந்திரங்களை எவ்வாறெல்லாம் தனது தன்னலத்திற்காகவும் மக்களுக்கெதிராகவும் திருப்பி விடுகிறது என்பதை தனது பதிவுகள் மூலம் அக்கு வேறாகவும், ஆணி வேறாகவும் பிய்த்து தனது வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் படிப்போர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் தனது வலைப் பதிவில் கருணாநிதி அரசுக்கு கவுண்ட் டவுன் பகுதியை வெளியிட்டுள்ளார்.
http://www.savukku.net/

கருணாநிதியின் தமிழர் விரோதப் போக்கைப் புள்ளி விபரங்களுடன் விவரித்து வந்தார்.

இணைய உலகில் கருணாநிதியை அனைவரும் காரி உமிழ்ந்து வருவது அனைவரும் அறிந்த்ததே. இணைய உலகில் எழுந்து வரும் எதிர்ப்புகளைப் பொறுக்க மாட்டாத கருணாநிதி அரசு தன் ஏவல் துறையை ஏவி எழுத்தாளர் சவுக்கைக் கைது செய்து தன் கையாலாகாத் தனத்தைக் காட்டியுள்ளது. எழுத்தாளர் சவுக்கு, இணையத்தில் மட்டுமல்லாது அனைத்து பத்திரிக்கைத் துறையிலும் தொடர்பு வைத்துள்ளவர். இவரது கைது எழுத்துரிமைக்கு விடப்பட்ட பெரும் சவால். தானும் எழுத்தாளர், கவிஞர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி தனக்கு எதிராக வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு பதறுவது ஏன்?

கருணாநிதியின் இத்தகைய செயலைக் கண்டு அனைத்து வலைப் பதிவர் களும் கொதித்து போயுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் சவுக்கு அவர்களின் வலைப்பதிவில் இருக்கும் கவுண்ட் டவுன் போல கருணாநிதியின் நாட்கள் எண்ணப் பட்டு வருகின்றன. அது சுழியை எட்டும் போது கருணாநிதி ஆட்சியில் இருக்கப் போவதில்லை. அவர் இருக்குமிடம் சவுக்கு இப்போது இருக்கும் சிறையறையாகக் கூட இருக்கலாம்.

Sunday, June 27, 2010

பழ.கருப்பையா வீட்டைத் தாக்குவதா? தமிழினத் துரோகி கருணாநிதிக்கு கண்டனம்

பச்சைத் தமிழர் பழ.கருப்பையா நல்ல தமிழில் பேசக் கூடியவர். தனித்தமிழில் பேசியும் எழுதி வந்தவர். செட்டிநாட்டு பின்புலத்தில் இருந்து வந்து தமிழர் பண்பாட்டை பாரறிய பரப்பி வந்தவர். தமிழினத் துரோகி கருணாநிதியின் கயமைத் தனங்களையெல்லாம் அச்சு ஊடகங்களிலும், தொலைக்கட்சிகளிலும் கருத்துரை வழங்கிவந்தார். அவருடைய கருத்துரைகள் தமிழ் மக்களையெல்லாம் வெகுவாக ஈர்த்துவந்தது.




இந்நிலையில் கருணாநிதியின் கபட வேடங்களையும், செம்மொழி நாடகத்தையும் பற்றி பகிரங்கமாக நேர்காணலிலும், கட்டுரைகளில் எழுதி வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத கருணாநிதி கும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மக்களாட்சியின் மீது அக்கறை கொண்ட எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இந்த செயல் கருணாநிதியின் அழிவையே காட்டுகிறது.



மக்கள் விரோத கருணாநிதிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் ஆட்டோ வருமா? அல்லது தமிழினத் துரோகி கருணாநிதியின் ஆட்சிக்கு முடிவு விரைவில் வருமா?

Friday, June 18, 2010

கருணாநிதியின் மாநாட்டை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

தான் நடத்தப் போகும் மாநாட்டிற்காக கருணாநிதி எழுதியிருக்கும் பாடல் ஒரு கேலிக் கூத்து. அவரது கட்சியில் கூட சில சில்லரைக் கவிஞர்கள் உள்ளனர். அவர்களின் பொறுப்பில் விட்டு விட்டு இவர் பேசாமல் நடிகைகளின் விண்ணப்பங்களைப் பரிசீலித்துக் கொண்டிருந்திருக்கலாம். அதை விடுத்து தன் பெயரை முன்னிலைப் படுத்த வேண்டுமென்பதற்காக கவிதை எழுத கிளம்பிவிட்டார்.

சரி வந்ததுதான் வந்தார், சொந்தமாக எழுத ஒரு வரி கூடவா கிடைக்கவில்லை. இவர் எழுதிய கவிதை அப்படியே ஆறாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் உள்ளடக்கம் பகுதியில் வருவது போல இருக்கிறது. பாடப் புத்தகத்தின் உள்ளடக்கம் பகுதியில் தான் புத்தகத்தின் உள்ளே என்ன உள்ளது என்பதை பக்க வரிசையுடன், பாடல்களின் தலைப்பு அல்லது முதல் வரி குறிப்பிடப் பட்டு இருக்கும். பக்க எண்களை நீக்கிவிட்டு படித்தால் அது கவிதையாகி விடுமா? ஏதேனும் பொருள் தருமா? அது போலவே சில பாடல்களின் முதல் வரியைக் காப்பியடித்து பக்கத்தை நிரப்பி பொருளற்ற வகையில் பாடல் இயற்றி, அதற்காக பாராட்டுக்களை வாங்கிக் குவித்துள்ளார் இந்த இலக்கிய பயில்வான்.

செம்மொழி தமிழை வாழ்த்திப் பாடிய பாடலில் பொருளே இல்லை. தமிழ் எப்படி செம்மொழியாகும் தகுதியுடையது என்பதை விளக்கும் வரிகளே இல்லை. இது இப்படி இருக்க தமிழ்த் தாய் வாழ்த்துக்கு பதிலாக இப்பாடல் இடம்பெறுமாம். மனோன்மனீயம் சுந்தரனார் அவர்களால் சுயமாக சிந்தித்து தமிழின் தொன்மை பெருமைகளைக் குறித்துப் பாடப்பட்ட ”நீராறும் கடலுடுத்த” என்ற பாடலுக்கு எந்த வகையில் இவர் பாடல் நிகராகும். இதற்காக ஒரு பாராட்டு விழாவா? நாமும் பாராட்டி விடுவோம். இதன் மூலம் இவர் காப்பியர் கருணாநிதி என்றழைக்கப் படுவாராக.



தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் அழித்தொழித்து விட்டு அனைத்து இடங்களிலும் தன் பெயரும், அனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் தன் குடும்பத்தினர் பெயர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு செயல் பட்டு வரும் கருணாநிதி நடத்தப் போகும் இந்த மாநாடும் அதற்கான இன்னொரு முயற்சிதான்

அண்ணாவால் துவக்கப் பட்ட இயக்கத்தை தன் குடும்பம் என்கிற ஆக்டோபஸ் கரங்களால் ஆக்கிரமித்துக் கொண்ட கருணாநிதி இப்போதெல்லாம் மேடைகளில் அண்ணா பற்றி அதிகம் பேசுவதில்லை. அவரே அப்படியென்றால் மற்றதுகள் என்னவோ தி.மு.க.வைத் தோற்றுவித்ததே கருணாநிதி என்கிற தொனியிலேயே பேசி வருகின்றன. அண்ணாவின் நூற்றாண்டான கடந்த ஆண்டு சிறிய அளவில் கூட்டம் நடத்தி முடித்து கொண்டது க.தி.மு.க.(கருணாநிதி தி.மு.க.)

இப்படி தி.மு.க. என்கிற இயக்கத்தைத் தோற்றுவித்த அறிஞர் அண்ணாவின் பெயரையே இருட்டடிப்பு செய்து தன் பெயரை முன்னிலைப் படுத்தி வரும் கருணாநிதி சில நாட்களுக்கு முன் செய்த ஒரு அடாத செயல் தமிழக சட்ட மன்றக் கட்டிடம் கட்டியது. திறப்பு விழாவிற்கு முன்பாக பீகார் தொழிலாளர்கள் எல்லாம் சும்மா என்பது போலும் தானே கல் சுமந்து கட்டி முடித்தது போலும் தோற்றத்தை ஏற்படுத்த காலையில் எழுந்தால் ஓமந்தூரார் தோட்டம், மாலையில் அடைந்தால் ஓமந்தூரார் தோட்டம் என்று காட்சியளித்தார். கட்டிடம் மேலெழுந்து வர வர அனைத்து மக்களும் முகம் சுழிக்கும் வகையில் ஒரு அவமானச் சின்னம் போல, எண்ணெய் தொட்டிபோல வடிவத்தில் வந்து நின்றது. இன்னும் கட்டி முடிக்கப் படவில்லை. திறப்பு விழாவிற்காக அவசர கோலத்தில் ஒப்பனை செய்யப் பட்ட அந்த கட்டிடம் இப்போது ஒப்பனை கலைக்கப் பட்டு காணச் சகிக்காத வகையில் வேலை நடந்து கொண்டு வருகிறது. தன் பெயரில் வர வேண்டுமென்பதற்காக அவசரம் அவசரமாக ஒப்பனை செய்யப் பட்ட கட்டிடத்தில் மீண்டும் முதலில் இருந்து பணிகள் துவக்கப் பட்டுள்ளன. அழித்து அழித்து விளையாட இது என்ன சிறு பிள்ளை விளையாட்டா?

 இதில் என்ன கொடுமையென்றால் கட்டிடத்தில் துளியளவும் தமிழர் கட்டிடக் கலையோ, திராவிடக் கட்டிடக் கலையோ இல்லாமல் போனதுதான். எங்கேயோ சீனாவில், இந்தோனேசியாவில், வியட்னாமில், மற்றும் கீழைத் தேயங்களிலெல்லாம் தமிழர் கட்டிடக் கலையில் சோழர் கட்டிய கட்டடங்களை இப்போது காணும் போதும் பெருமை கொள்கிற நாம் தமிழகத்தின் தலை நகரில், அரசு தலைமைச் செயலகத்தைத் தமிழர் கட்டடக் கலையைப் புறந்தள்ளி வெட்கித் தலை குனியும் வகையில் ஒரு அவமானச் சின்னமாக்கி மக்கள் பணத்தை வீணடித்துள்ளார் இந்த கருணாநிதி. கட்டிட மேஸ்திரி கருணாநிதி இப்போதெல்லாம் அங்கு வருவதேயில்லையாம்.


செய்தித்தாள்களின் பசிக்குத் தீனி செய்திகளா? அல்லது மக்கள் பணத்தில் அரசு வழங்கும் பக்கம் பக்கமாக வெளிவரும் விளம்பரங்களா? இப்போதெல்லாம் மக்களாட்சியின் நான்காம் தூண்களான செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்கள் பிரச்சினையை, அரசின் ஊழலை, முறைகேடுகளை வெளியிட முன் வருவதேயில்லை. அப்படி வெளியிட்டால் அரசு விளம்பரங்கள் பெற்று கல்லாக் கட்ட முடியாது. நான்கு வரியில், சிறிய அளவில், கருப்பு வெள்ளையில், வெறும் எழுத்துக்களில் ஒரு ஒரு விளம்பரம் என்றாலே ஆயிரக் கணக்கில் வசூலிக்கும் செய்தித்தாள் நிறுவனங்கள் பக்கம் பக்கமாய் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு எத்தனை கோடிகள் வசூலிக்கும். இதில் தினத்தந்தி போன்ற நாளிதழ்கள் முரசொலியின் மறு பதிப்பாகவே வெளிவருகின்றன. கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற நான்காண்டுகளில் தினத்தந்தி நாளிதழுக்கு அரசு செலுத்திய விளம்பரக் கட்டணம் மட்டும் நாலாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று பத்திரிக்கைத் துறை நண்பர் வெளியிட்ட தகவல் அதிர வைக்கிறது. இது உண்மையானால் தினத்தந்தி முரசொலியின் மறு பதிப்பென்ன, கருப்பு சிவப்பு கறையுடனே வரலாம் என்கிறீர்களா? அதுதான் இல்லை. இப்போது கருப்பு சிவப்பு கறையுடன் வெளிவந்தால் அடுத்த ஆண்டு ஆட்சி மாறும் போது கறையை மாற்றும் சூழல் வரும்போது சங்கடமாகி விடாதா?


இந்த மாநாடு அறிவிக்கப் பட்ட நேரமும், நோக்கமும் என்ன? இந்திய அரசாலும், இலங்கை அரசாலும் அங்கே ஈழத்தில் தமிழ் மக்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப் படுகிறார்கள். இந்திய அரசில் பங்கு வகிக்கும் கருணாநிதி அதனைக் கண்டு கொள்ளாமல் உடந்தையாக இருந்ததுடன், தமிழகத்தில் தன்னெழுச்சியாக உருவான போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலும் திசை திருப்பும் வகையிலும் போலிப் போராட்டங்களை நடத்தி தமிழர் ஒன்றுபடுவதைத் தடுத்தார். முடிவில் போர் முடிந்தது. கருணாநிதியின் துரோகத்தால் ஏராளமான தமிழர்கள் செத்து மடிந்தனர். தான் செய்த துரோகத்தை மறைக்கவும், தனக்கு கிடைத்த புதிய பட்டமான தமிழினத் துரோகி என்கிற பட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நப்பாசையில் மக்களை ஏமாற்ற போட்ட முகச் சாயம் தான் மாநாடு. மழை பெய்தால் நரியின் சாயம் வெளுத்துப் போகும். நாட்டாமை பதவியும் போகும்.


இந்த மாநாட்டுக்கு பெயர் வைத்தவர்கள் அதற்கு ஊழல் பரவலாக்கும் மாநாடு என்று வைத்திருந்தால் சாலப் பொருத்தமாக இருந்திருக்கும். ஊழலில் ஊறித் திழைக்கும் கேடுகெட்ட கூடாரம் தன் பரிவாரங்களையெல்லாம் ஒரு பந்தலின் கீழ் அழைத்து வந்து, எங்களுக்கு திகட்டி விட்டது, நீங்களும் கொஞ்சம் அடிச்சுக்கோங்க அப்படினு 1000 கோடி அரசுப் பணத்தை (மக்கள் பணத்தை) ஒதுக்கி பந்தி வைக்கிறது. பரிவாரங்களுக்கு பந்தி வைக்க வேண்டுமென்றால் ஊழலில் சேர்த்த பணத்தில் இருந்து கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் குடும்பக் கருவூலத்தில் குறைவு ஏற்பட்டு விடாதா? ஆகவே தன் அடி வருடிகளை எல்லாம் பல்வேறு குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இத்தனை கோடிகள் ஒதுக்கீடு, உங்களால் முடிந்தவரை அடித்துக் கொள் என்று மக்கள் பணத்தை பங்கு வைக்கிறது. இவனுங்களுக்கு திறமையிலா பஞ்சம். சும்மா போட்டுத் தாக்குகிறானுங்க. இதிலே வேடிக்கை பார்க்கப் போகும் சாதா தமிழனுக்கு என்ன கிடைக்கப் போகிறது? டவுசர் கிழிவதுதான் மிச்சம்.

Tuesday, May 18, 2010

முத்துக்குமாருக்கு சிலை அமைக்கத் தடை விதிப்பதா?: வைகோ கண்டனம்.

ஈழத் தமிழருக்காகத் தன் இன்னுயிரையே ஈகம் செய்த முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதைத் தடுத்த தமிழக அரசுக்கு  வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியும், படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு அதில் பங்கேற்றவர்களைக் கண்டித்தும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசிய போது மாவீரன் முத்துக் குமாருக்கு சிலை வைக்கத் தடை விதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிலை வைக்க அனுமதி மறுத்ததற்கு கருணாநிதியின் உண்மை முகத்தைத் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியதாலே தான் எனவும் தெரிவித்தார்.

வைகோ அவர்களின் முழு உரையைக் கேட்க இங்கு அழுத்தவும்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரைகள் (ஒலி வடிவில் இணைப்பு)

கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலியும், படுகொலைக்கு காரணமானவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய பொதுக் கூட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் உரையாற்றினர். உரை ஒலி வடிவில் கீழே தரப்பட்டுள்ளது..

பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை...

பதிவிறக்கம் செய்ய

வைகோ அவர்கள் ஆற்றிய உரை...

1. பதிவிறக்கம் செய்ய
2. பதிவிறக்கம் செய்ய

வைகோ அவர்கள் உரையாற்றி முடிக்க இருந்த நேரத்தில் காவல்துறை குறுக்கிட்டு கூட்டத்தை முடித்துக் கொள்ள வற்புறுத்தினர். ஏற்கனவே வைகோவின் எழுச்சி மிகு உரையால் உணர்வின் விழிம்பில் இருந்த கூட்டம், காவல் துறை தலையீட்டால் கடும் கோபமடைந்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கூட்டத்தினரால் தாக்கப் பட்டுவிடும் சூழல் ஏற்பட்டது. வைகோ தலையிட்டு கூட்டத்தினரை கட்டுப் படுத்தியதுடன் மேலும் சில நிமிடங்கள் உரையாற்றி விட்டு கூட்டத்தை முடித்து வைத்தார். வைகோவின் சொல்லுக்கு கட்டுப் பட்டு கூட்டம் அமைதியடைந்ததை காவல் துறையினரே பாராட்டினர்.