Wednesday, July 21, 2010

வலைப் பதிவர் சவுக்கு கைது! கருணாநிதி அரசுக்கு குவியும் கண்டனங்கள்

தமிழ் வலைப் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் சவுக்கு. இவர் கருணாநிதி அரசின் தமிழர் விரோதப் போக்கைத் தோலுரித்துக் காட்டியதுடன், தமிழக அரசு தனது எந்திரங்களை எவ்வாறெல்லாம் தனது தன்னலத்திற்காகவும் மக்களுக்கெதிராகவும் திருப்பி விடுகிறது என்பதை தனது பதிவுகள் மூலம் அக்கு வேறாகவும், ஆணி வேறாகவும் பிய்த்து தனது வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் படிப்போர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

இவர் தனது வலைப் பதிவில் கருணாநிதி அரசுக்கு கவுண்ட் டவுன் பகுதியை வெளியிட்டுள்ளார்.
http://www.savukku.net/

கருணாநிதியின் தமிழர் விரோதப் போக்கைப் புள்ளி விபரங்களுடன் விவரித்து வந்தார்.

இணைய உலகில் கருணாநிதியை அனைவரும் காரி உமிழ்ந்து வருவது அனைவரும் அறிந்த்ததே. இணைய உலகில் எழுந்து வரும் எதிர்ப்புகளைப் பொறுக்க மாட்டாத கருணாநிதி அரசு தன் ஏவல் துறையை ஏவி எழுத்தாளர் சவுக்கைக் கைது செய்து தன் கையாலாகாத் தனத்தைக் காட்டியுள்ளது. எழுத்தாளர் சவுக்கு, இணையத்தில் மட்டுமல்லாது அனைத்து பத்திரிக்கைத் துறையிலும் தொடர்பு வைத்துள்ளவர். இவரது கைது எழுத்துரிமைக்கு விடப்பட்ட பெரும் சவால். தானும் எழுத்தாளர், கவிஞர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி தனக்கு எதிராக வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு பதறுவது ஏன்?

கருணாநிதியின் இத்தகைய செயலைக் கண்டு அனைத்து வலைப் பதிவர் களும் கொதித்து போயுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் சவுக்கு அவர்களின் வலைப்பதிவில் இருக்கும் கவுண்ட் டவுன் போல கருணாநிதியின் நாட்கள் எண்ணப் பட்டு வருகின்றன. அது சுழியை எட்டும் போது கருணாநிதி ஆட்சியில் இருக்கப் போவதில்லை. அவர் இருக்குமிடம் சவுக்கு இப்போது இருக்கும் சிறையறையாகக் கூட இருக்கலாம்.

6 comments:

Anonymous said...

இது உண்மைச் செய்தியா?

வசந்தத்தின் தூதுவன் said...

//Anonymous said...
இது உண்மைச் செய்தியா?//

உண்மைதான்.. இன்று இரவு ஜெயா செய்திகளில் கூட இந்த தகவல் வெளியானது.

பொற்கோ said...

ஜெயா செய்தியில் சொல்லிவிட்டால் அதற்கும் சேர்த்தல்லவா தண்டிப்பாய்ங்க இந்த ரொம்ப நல்லவங்க !?......தூ****!

smart said...

கைதுக்கு எனது கண்டனங்கள்

ரோஸ்விக் said...

கேவலமான அணுகுமுறைகள் இந்த அரசிடமிருந்தும்... காவல்துறையிடமிருந்தும்....
வன்மையான கண்டனங்கள்...

seeprabagaran said...

உண்மையான மக்களாட்சியை விரும்பும் அனைவரும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்க வேண்டும்.