ஈழத் தமிழருக்காகத் தன் இன்னுயிரையே ஈகம் செய்த முத்துக்குமாருக்கு சிலை அமைப்பதைத் தடுத்த தமிழக அரசுக்கு வைகோ அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். நேற்று சென்னை தி.நகரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியும், படுகொலையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததோடு அதில் பங்கேற்றவர்களைக் கண்டித்தும் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வைகோ பேசிய போது மாவீரன் முத்துக் குமாருக்கு சிலை வைக்கத் தடை விதித்த தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். சிலை வைக்க அனுமதி மறுத்ததற்கு கருணாநிதியின் உண்மை முகத்தைத் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியதாலே தான் எனவும் தெரிவித்தார்.
வைகோ அவர்களின் முழு உரையைக் கேட்க இங்கு அழுத்தவும்.
Tuesday, May 18, 2010
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் வைகோ மற்றும் பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரைகள் (ஒலி வடிவில் இணைப்பு)
கடந்த ஆண்டு இதே நாளில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலியும், படுகொலைக்கு காரணமானவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மறுமலர்ச்சி தி.மு.க. நடத்திய பொதுக் கூட்டத்தில் அய்யா பழ.நெடுமாறன் அவர்களும், வைகோ அவர்களும் உரையாற்றினர். உரை ஒலி வடிவில் கீழே தரப்பட்டுள்ளது..
பழ.நெடுமாறன் அவர்கள் ஆற்றிய உரை...
பதிவிறக்கம் செய்ய
வைகோ அவர்கள் ஆற்றிய உரை...
1. பதிவிறக்கம் செய்ய
2. பதிவிறக்கம் செய்ய
வைகோ அவர்கள் உரையாற்றி முடிக்க இருந்த நேரத்தில் காவல்துறை குறுக்கிட்டு கூட்டத்தை முடித்துக் கொள்ள வற்புறுத்தினர். ஏற்கனவே வைகோவின் எழுச்சி மிகு உரையால் உணர்வின் விழிம்பில் இருந்த கூட்டம், காவல் துறை தலையீட்டால் கடும் கோபமடைந்து தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கூட்டத்தினரால் தாக்கப் பட்டுவிடும் சூழல் ஏற்பட்டது. வைகோ தலையிட்டு கூட்டத்தினரை கட்டுப் படுத்தியதுடன் மேலும் சில நிமிடங்கள் உரையாற்றி விட்டு கூட்டத்தை முடித்து வைத்தார். வைகோவின் சொல்லுக்கு கட்டுப் பட்டு கூட்டம் அமைதியடைந்ததை காவல் துறையினரே பாராட்டினர்.

Friday, May 7, 2010
சுடச் சுட: இது உங்கள் குரல் தான் திரு.ஆ.ராசா அவர்களே.. (ஒளிப்படம் இணைப்பு)
தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா, நிரா ராடியாவுடன் பேசியது என்ன? என்பது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே செய்தியில் வெளியான ரகசிய ஒலி நாடா வெளியாகியுள்ளது. It's Your Voice Mr.Raja. என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி தொகுப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால்,
1. மற்ற எவரை விடவும் கனிமொழி ராசாவுக்கு பதவி கிடைக்க வேண்டுமென்று தீவிரமாக முனைந்துள்ளார்.
2. அழகிரி மற்றும் தயாநிதிக்கு என்ன துறை வழங்க வேண்டுமென்பதை ராசா தீர்மானிக்கிறார்.
3. டி.ஆர். பாலுவை நீக்குவது பற்றியும் பேசுகிறார்.
4. மூன்று குடும்ப உறுப்பினர்களையும் திருப்தி படுத்துவது சிரமம் என்கிறார் ராடியா. இவர் இளிக்கிறார். அழகிரி மகன், தயாநிதி பேரன் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் ஆ.ராசா கருணாநிதிக்கு என்ன உறவு?
தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கிறது. ஒலி நாடாக்கள் வெளிவர வெளிவர இங்கு தொடர்ந்து வெளியிடப் படும்.
இந்த ஒலி நாடாவில் தயாநிதி எந்த சூழ்நிலையிலும் தொலை தொடர்பு துறைக்கு வரக்கூடாது என்கிறார் கனிமொழி..
இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால்,
1. மற்ற எவரை விடவும் கனிமொழி ராசாவுக்கு பதவி கிடைக்க வேண்டுமென்று தீவிரமாக முனைந்துள்ளார்.
2. அழகிரி மற்றும் தயாநிதிக்கு என்ன துறை வழங்க வேண்டுமென்பதை ராசா தீர்மானிக்கிறார்.
3. டி.ஆர். பாலுவை நீக்குவது பற்றியும் பேசுகிறார்.
4. மூன்று குடும்ப உறுப்பினர்களையும் திருப்தி படுத்துவது சிரமம் என்கிறார் ராடியா. இவர் இளிக்கிறார். அழகிரி மகன், தயாநிதி பேரன் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் ஆ.ராசா கருணாநிதிக்கு என்ன உறவு?
தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கிறது. ஒலி நாடாக்கள் வெளிவர வெளிவர இங்கு தொடர்ந்து வெளியிடப் படும்.
இந்த ஒலி நாடாவில் தயாநிதி எந்த சூழ்நிலையிலும் தொலை தொடர்பு துறைக்கு வரக்கூடாது என்கிறார் கனிமொழி..
சுடச் சுட: இது உங்கள் குரல் தான் திரு.ஆ.ராசா அவர்களே.. (ஒளிப்படம் இணைப்பு)
அடுத்துள்ள பதிவில் கனிமொழி ஒலி நாடாவும் இணைத்து வெளியிடப் பட்டுள்ளது. பின்வரும் இணைப்பை அழுத்தவும்.
http://pongutamilar.blogspot.com/2010/05/blog-post.html
http://pongutamilar.blogspot.com/2010/05/blog-post.html
Subscribe to:
Posts (Atom)