Saturday, April 24, 2010

கண்டன உண்ணாநோன்பில் வைகோ மற்றும் பழ நெடுமாறன் உரை (ஒலி இணைப்பு)

தமிழன்னை பார்வதியம்மாளை சென்னையில் நுழைய அனுமதி மறுத்த கருணாநிதி அரசைக் கண்டித்து சென்னையில் 22-04-2010 அன்று நடைபெற்ற மாபெரும் உண்ணா நோன்பில் பழ.நெடுமாறன் இரு முறையும் வைகோ அவர்கள் இரு முறையும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் வைகோ ஆற்றிய நிறைவுரை ஒலி வடிவில் பின் வருமாறு..

வைகோ அவர்கள் முதலில் உரையாற்றும் போது விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விளக்கினார்.பின்னர் வைகோ அவர்கள் ஆற்றிய நிறைவுரை



தரவிறக்கம் செய்ய

முன்னதாக பழ.நெடுமாறன் அவர்கள் விமான நிலையத்தில் நடந்தது பற்றி ஆற்றிய   விளக்கவுரை.




தரவிறக்கம் செய்ய

பின்னர் இரண்டாம் முறை பழ நெடுமாறன் அவர்கள் உரையாற்றும் போது கருணாநிதி குட்டிமணியை இலங்கை அரசிடம் காட்டிக் கொடுத்தது உட்பட செய்த துரோகங்களை பட்டியலிட்டுப் பேசினார்.

Tuesday, April 20, 2010

முல்லைப் பெரியாறும் கையாலாகாத கருணாநிதியும்

முல்லைப் பெரியாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதில் கேரள அரசு எவ்வளவு முனைப்புக் காட்டுகிறது என்று பார்க்கும் போது மக்கள் இயக்கத்தின் மகத்துவம் நமக்கு புலப்படுகிறது. மக்கள் இயக்கத்தின் மகத்துவம் என்று பேசுகிற வேளையில், கேரள அரசின் செயல்பாட்டை காணும்போது இதிலும் புகுந்து செயற்கையாய் ஒன்றை உருவாக்க முடியும் என்றென்ண்ணுகிற போது அடப் பாவிகளா? என்ற அங்கலாய்ப்புதான் தோன்றுகிறது.







முல்லைப் பெரியாறு அணைக்கட்டு தமிழகத்தின் மலைப்பகுதியில் அமைந்திருந்தாலும் ஆங்கிலேய அரசு மற்றும் அக்கால ஆற்காடு வீராசாமி போன்ற மங்குனி மந்திரிகளாலும் பக்கத்து நாட்டிடம் பகிர்ந்துகொள்வோம் என்ற அடிப்படையில் திருவிதாங்கூர் மன்னரிடம் அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப் பட்டு 900 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பெறப் பட்டு தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களான மதுரை, கம்பம், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் போன்ற பகுதிகளின் பாசன தேவை நிறைவேற்றப் பட்டு வந்துள்ளது. முல்லைப் பெரியாறின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அத்தனையும் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ளது.

முல்லைப் பெரியாறு வழக்கை பொறுத்த வரையில் நீதியை நிலைநாட்டவேண்டிய உச்ச நீதிமன்றம் கேரள அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என வடிவேலு பாணியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதாவது 152 அடிஉயரமுள்ள நீர்த்தேக்கத்தில் 142 அடி நீரத்தேக்கிவைத்துக் கொள்ளலாம் என்று. இந்த அளவிற்குக் கூட மனமிறங்காத மலையாள அரசு அணைக்கட்டு பகுதியில் உல்லாச விடுதிகள் கட்டி வைத்துள்ள தொழிலதிபர்களின் நிர்ப்பந்தத்திற்கு கட்டுப் பட்டு நீரளவை உயர்த்த ஒத்துழைக்காததுடன் ஒரு நயவஞ்சக சட்டத்தை இயற்றி இந்திய ஒருமைப் பாட்டிற்கு வேட்டு வைத்துள்ளதுடன் உச்ச நீதி மன்றத்தில் ஏற்கனவே வழங்கப் பட்ட தீர்ப்பை முடக்கியுள்ளது.

கேரள அரசு இத்தனை செய்தும் தமிழக அரசு தன் பொறுப்பை உணராமலும், தட்டிக் கழிக்கும் வகையிலும் ஒரு செயலற்ற கையாலாகாத அரசாக வெறுமனே வேடிக்கை பார்த்து வருகிறது.

கேரள அரசு இதுவரை இந்த வழக்கில் முன்னேறிச் செல்வதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். கேரள முதல்வர் வெறுமனே வழக்கை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைத்துவிட்டு நடிகைகளின் ஆட்டம் பார்க்கவும், நடிகர்களின் பாராட்டு விழாவில் மூழ்கித்திழைக்கவும் இல்லை. மாறாக இதனை ஒரு மக்கள் போராட்டமாக போலியாகவேனும் எடுத்துச் சென்று அதனை உச்ச நீதிமன்றத்திலும், மத்திய அரசிடமும் அழுத்தமாகத் தந்து வெற்றி பெற்றுள்ளார்.

மலையாளிகளின் போராட்டத்தை போலியான, கணிப்பொறி மூலம் உருவாக்கப் பட்ட வரைகலைப் படங்களின் உதவியோடு மாநில அரசே மக்கள் மனதில் ஒரு பாதுகாப்பற்ற சூழ்லை உருவாக்கி அவர்களை போரடச் செய்து அந்த போராட்டங்களையே மத்திய அரசுக்கும் உச்ச நீதி மன்றத்திற்கும் அழுத்தமாகத் தந்து காரியம் சாதித்து வந்துள்ளது. இனியும் அவ்வாறே செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடப்பதென்ன? மக்களிடம் தன்னெழுச்சியாய் உருவாகும் போராட்டங்களை திட்டமிட்டு தடுப்பதுடன் அது பற்றிய செய்திகள் வெளிவந்தால் எங்கே தான் காலில் விழுந்து கிடக்கும் தன் எஜமானர்கள் கோபித்துக் கொண்டு விடுவார்களோ என்றெண்ணி இருட்டடிப்பு செய்து மக்கள் போராட்டங்களை இருட்டடிப்பு செய்யும் கேடுகெட்ட செயலில் கருணாநிதி அரசு இறங்கியுள்ளது.

இதற்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் தற்போது நடைபெறும் பார்வதியம்மாள் பிரச்சினையையே எடுத்துக் கொள்ளலாம். எங்கே வைகோவும் பழ.நெடுமாறனும் பெயர் வாங்கிக் கொண்டு போய் விடுவார்களோ என்று எண்ணி அந்த மூதாட்டியை சிகிச்சை பெற விடாமல் திருப்பி அனுப்பி அதில் ஆனந்தப் பட்டுக் கொள்ளும் கேடு கெட்ட செயலைப் போலவே முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழர் நலன் காக்கும் போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது இந்த கருணாநிதி கும்பல். செயல் பட வேண்டிய நேரத்தில் செயல்பட்டு தமிழர் நலனைக் காத்திருந்தால் மக்கள் போராட வேண்டிய அவல நிலையே வந்திருக்காதே?

இந்த சூழ்நிலையில் மே 28 ல் மதிமுக மறியல் போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஏற்கனவே பல்வேறு நிலைகளில் மக்களின் பேராதரவுடன் முல்லைப் பெரியாறு பாதுகாப்பு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள மதிமுக இந்த போராட்டத்திலும் வெற்றி பெறும் என்பதில் அய்யமில்லை.

பணம், பதவி, பட்டம், துரோகம், திருமா, கருணா

கலியுகத்தின் கடைசிச் சோழனின் தாய், தாய் தமிழகத்தில் நுழைய அனுமதி மறுத்து திருப்பி அனுப்பப் பட்டதன் மூலம் மானமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் காயடிக்கப் பட்டு விட்டது. இது ஒன்றும் நமக்கு புதிது இல்லையே. ஒவ்வொரு தடவையும் தமிழா? மற்றதா? தமிழனா? மற்றவனா? என்ற கேள்வி வரும் போதெல்லாம் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. அதிக பட்சமா நாம் என்ன செய்வோம். இந்த வலைப் பதிவர்களுக்காவது ஒரு வழி இருக்கு. ஒரு கண்டனப் பதிவு போடலாம். கருணாநிதி, சோனியா, திருமா, ராஜபக்ச, மன்மோகன், சிவசங்கர மேனன், இன்ன பிற இத்யாதி துரோகிகளையும் ஒட்டு மொத்தமா திட்டி தீக்கலாம். இதனால் ஒரு பொது இடத்துல அவங்கள நிக்க வச்சு இந்த உலகத்துக்கே கேக்கிற மாதிரி கத்தி அவர்களின் துரோகத்தை சொல்லி, அவனுங்க மூஞ்சில காரித் துப்பி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல ஏத்தி, கட்ட வெளக்குமாறால சாத்தி, பிஞ்ச செருப்பால விளாசி தங்கள் கோபத்த தணிச்சுக்கிட்ட ஒரு திருப்தி கிடைக்குது. சில பேருக்கு இப்படி எழுதும் போது எல்லாத்தையும் நினச்சுப் பாக்க வேண்டியிருக்கதால இன்னும் அதிகமாக போகிற நிலமையும் இருக்கு. ஆனா சாதாரணப்பட்ட மனுசன் என்னசெய்வானு நெனச்சுப் பாத்தா நெஞ்சடைக்குது. அவனால எதுவுமே செய்ய முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. பதிவர்களைப் போல் இவர்களால் மேற்சொன்ன செய்கைகளின் மூலம் வடிகால் தேட முடியாது. ஏனென்றால் அந்த பட்டியலில் வரும் அத்தனையும் பதவியில் அதிகாரத்தில் இருக்கின்றன. ஏற்கனவே தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும், பழகும் தன்மை (Interpersonal Skills) படு மோசமாக இருக்கிற காரணத்தால் யாருக்கிட்டேயும் இது பத்தி பேசுவதும் இல்லை. ஒருவேளை பேசியே ஆகணும்னு வந்தாக் கூட மற்றவர் யாருன்னு பாத்துதான் பேச வேண்டியிருக்கிறது. இவர்கள்தான் கட்சி, கழகம், சாதி, இயக்கம் என அணி அணியாக பிரிந்து கிடக்கிறார்களே? இம்மியளவும் கருத்தொற்றுமையோ, சகிப்புத்தன்மையோ கிடையாது. இதெல்லாம் இருந்தால் ஒரே கொள்கைக்காக ஒராயிரம் கட்சிகள் வர வேண்டிய அவசியமென்ன? அகம் பிடித்தவர்கள். யாரையும் யாரும் நம்புவதில்லை. யாரையும் யாரும் நம்ப முடிவதில்லை. யார் சொன்னதையும் யாரும் கேட்பதுவுமில்லை, கேட்க முடிவதுமில்லை. ஏங்க கட்டின பொண்டாட்டிகிட்டே கூட இதே நிலமைதான். இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கு இலங்கையில் 2008 முதல் 2009 மே வரையும் இன்னமும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். இன்றைக்கு கூட தாய் பார்வதியம்மாளுக்கு ஒரு கொடுமை நடந்திருக்கிறது. காமச் சாமியார்கள் கக்கா போவதையெல்லாம் கள்ளத்தனமாகப் படமெடுத்து மணிக்கு இரு தடவைகள் ஒளிபரப்பி முகம் சுளிக்க வைத்தன சன் தொலைக்காட்சியும் கலைஞன் தொலைக்காட்சியும். ஆனால் தமிழன் சார்ந்த, தமிழினம் சார்ந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து பிற ஊடகங்களோடு தொடர்பில்லாத சாதாரண தமிழனை மழுங்கடிக்கின்றன. இந்த கேடுகெட்ட தொலைக் காட்சிகளை நம் வீட்டு தொ.கா. பெட்டியிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று சொன்னால் கட்டின பொண்டாட்டி கூட கேட்பதில்லை. தனியாக பேசும் போதெல்லாம் நல்லாத்தான் பேசுகிறாள். ஈழத் தமிழன் நிலமையும் இங்குள்ள தமிழன் நிலையையும் எடுத்துச் சொல்லும் போது அருமையாகக் கவனிக்கிறாள், அனுதாபத்தோடு உச் கொட்டி கேட்கிறாள். ஆனால் இதுக்கெல்லாம் பேசுகின்ற நேரம் மின் தடைஏற்பட்டிருக்க வேண்டும். (மின் தடை இருந்தால் மட்டுமே தனிப் பேச்சு என்பது வேறு சோகம்) மின்சாரம் திரும்பிவிட்டால் மீண்டும் முருங்கை மரமேறும் வேதாளம் போல தொ.கா. பெட்டிதான். தொடர்கள்தான். அப்ப அவனுக்கு ஓர்மையிருந்தால் தேர்தலில் வாக்களிக்கும்போது தமிழின விரோதிகளை புறக்கணித்து தமிழின நலம் விரும்பிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் வடிகால் தேடலாமே என்று சொல்வது புரிகிறது. தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. மன்னிக்கவும். அதுவரை அவனுக்கு ஓர்மையிருப்பதில்லை. மேலும் அங்கேயும் ஒரு கோடரிக் காம்பு இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்க பிரபாகரன் படத்தைப் பரப்பிக் கொண்டு உட்காந்திருக்கிறது. நாந்தான் எல்லாம், நாந்தான் எல்லாம் என்கிறது. கனிமொழி சகிதம் ராஜபக்சேவிடம் பல்லிளிக்கிறது. டக்ளசிடம் நலம் விசாரிக்கிறது. வேலுப்பிள்ளை இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு திரும்புகிறது. முத்துகுமார் என் தம்பி என்கிறது. சாகும் முன் என் பெயரைச் சொன்னான் என பெருமைப் பட்டுக் கொள்கிறது. திருமா துரோகம் செய்யாதே என்று சொல்ல வந்ததைக் கூட தனக்கு விளம்பரமாக செய்து கொள்கிறது. பார்வதியம்மாளுக்கு இவ்வளவு நேர்ந்த பின் எனக்கு எல்லாம் தெரியும் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி வந்தது, மலேசியாவில் இருந்து அலைபேசி வந்தது என்கிறது. எங்கே பழ.நெடுமாறன் அவர்களும் வைகோ அவர்களும் பெயரைத் தட்டிக் கொண்டு போய்விடுவார்களோ என்றெண்ணி மருத்துவச் சிகிச்சைக்காக வந்த அம்மாவைத் திருப்பி அனுப்ப கூட்டாளி கருணாவுடன் கலந்துரையாடி காரியமாற்றிவிட்டு, வெளியில் வந்து, பல் பிடுங்கப் பட்ட பாம்பான ஜெ. வைப் பார்த்து கை நீட்டுகிறது. என்னதான் நினைப்பான் அப்பாவித் தமிழன். யாருக்குத்தான் வாக்களிப்பான். ஆனால் ஒன்று, ஒருமுறைக்கு பலமுறை காயடிக்கப் பட்ட பின்னும் அதே இடத்தில் குறடால் பிடிப்பவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவான் என்பது மட்டும் உறுதி.




இதில் கூடவா அரசியல் செய்வீர்கள் மாக்களே. வைகோ அவர்களும் நெடுமாறன் அவர்களும் இதில் துளியளவும் அரசியல் கலந்துவிடக் கூடாது என்றெண்ணித்தான் யாருக்கும் வெளிப்படுத்தாமல் இந்த ஏற்பாட்டினைச் செய்தார்கள். இதனை மிகவும் தனிப்பட்ட முறையில் பழ.நெடுமாறன் இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப் பட்டு முறைப்படி விண்னப்பம் செய்து அனுமதி பெற்று அழைத்து வர ஏற்பாடு செய்யப் பட்டது. வழக்கமாக வைகோ தொடர் வண்டி நிலையத்துக்கோ, விமான நிலையத்துக்கோ அரசியல் வேலைகளுக்காக செல்லும் போது குறைந்தது 100 பேராவது திரண்டு  வருவார்கள். ஆண்டில் 300 நாட்கள் வரை சுற்றுப் பயணங்களில் மக்களோடு இருப்பவர் வைகோ. ஆனால் அம்மா வருவதையும் வரவேற்க செல்வதையும் கட்சியினரிடம் கூட பகிர்ந்து கொள்ளாமல் சென்றிருக்கிறார். விமான நுழைவாயிலில் காவல்துறையினரின் கூட்டமும் கெடுபிடியும் கண்ட பின்னரே, கருணா, சோனியா, திருமா கும்பலின் துரோகத்தை அறிந்து கொண்டு, மா.செ. வேளச்சேரி மணிமாறன் அவர்களுக்கு தகவல் சொல்கிறார். நள்ளிரவிலும் அணி அணியாய் ம.தி.மு.க.வினர் விமான நிலையம் வரத் தொடங்கினர். ஆனால் சற்று நேரத்தில் சதி முடிந்து விட்டிருந்தது. கழிவறை செல்லும்போது கூட கட்-அவுட் வைத்து விளம்பரம் செய்வது திருமா, குருமா, கருணா ஆகியோர் வேலை. மற்ற தமிழின உணர்வாளர்களுக்குக்கும் கூட இது பற்றி நிறைய வருத்தம் உள்ளது போல் தெரிகிறது. வருந்த வேண்டியதில்லை. பார்வதியம்மாளுக்கு இந்திய முறைப்படி விசா விண்ணப்பித்து விமானத்தில் அழைத்து வந்ததால் மட்டுமே இந்த சறுக்கல். மேலும் அவரது உடல் நிலை படகுப் பயணத்திற்கு உகந்ததாக இல்லை, அவ்வளவே. இல்லையென்றால் மற்றவர்களைப் போல இவர்களும் வந்திருக்க மாட்டார்களா? என்ன?



இன்று சட்ட மன்றத்தில் பேசிய துரோகி கருணாநிதி பேசியதில் இருந்து அவர்களின் உள்ளக் கிடக்கை வெளியில் வந்து விட்டது. இந்திய அரசே அனுமதி விசா வழங்கினாலும் இவர்கள் அனுமதி இன்றி பார்வதியம்மாள் தமிழகம் வர இயலாது என்பது போலவும், இனியும் வர விரும்பினால் தூதரகம் செல்ல வேண்டாம் என்னிடம் வாருங்கள் என்பது போலவும் பேசி அதிகாரம் தந்த திமிரில் பேசியுள்ளது இந்த கும்பல். டெல்லிக்காரன் எச்சிலைப் பொறுக்கி வாழும் காங். குழுவும் நியாயப் படுத்தியுள்ளது. பார்வதியம்மாள் சென்னை வருவது தெரியாது எனவும் பகன்றுள்ளது பன்னாடை. சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து சட்டப் பேரவையில் கவன ஈர்ப்பு கொண்டு வந்த பிறகுதான் இந்த கழிசடைக்கு தெரியுமாம். இரண்டு நாட்கள் வரை இவனும் குடும்ப தொ.கா. களும் மூச்சு விடாமல் இருந்தார்களே, தினத்தந்தி கூட படிக்காமலா அரசியல் வியாதியாக இருக்கிறதுகள்?தெரியாதென்றால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தமிழக காவல் துறையினருக்கு இரவு பத்து மணிக்கு மேல் என்ன வேலை? வாரத்தில் இரண்டு முறை விமான நிலையத்திற்கு வரும் வைகோ அவர்களிடம் முறையான அனுமதிச் சீட்டு இருந்தும் வாகனம் நிறுத்துமிடத்திலேயே தடுத்து நிறுத்தும் அதிகாரம் யார் கொடுத்தது? இதற்கு முன்னர் வந்த போதெல்லாம் இப்படித்தான் செய்தார்களா? இனிமேலும் இவ்வாறுதான் செய்யப் போகிறார்களா? ஒவ்வொரு தமிழனும் இனிமேல் கருணாநிதிக்காகவே காது வளர்க்க வேண்டும். அப்போதுதான் வலிக்காமல் வெவ்வேறு இடங்களில் காது குத்தலாம். இல்லையெனில் ஒரே இடத்தில் குத்தி புண்ணாகி விடும். நாடகம் முடியும் நாள் வரும். வேடம் கலையவும் ஓய்வு எடுக்கவும் வேளை வரும்.